எழுத்தாளர்: பாக்கியலட்சுமி
ரயிலைப் பிடிக்கும் அவசரம் கலாவுக்கு …..பாப்பா… ஊக்கு வாங்கிக்கோம்மா —ஒரு கொத்து பத்து ரூபாதான் —- பார்வைத்திறன் இல்லாத முதிய பெண்மணி … இவங்க வேற —என் அவசரம் புரியாம — அதோ அவள் ஏற வேண்டிய ரயில் …
அவசரமாகப் பணம் கொடுத்து அவள் கொடுத்ததைத் தன பேக்கில் போட்டு—ரயிலைப் பிடிக்க ஓடினாள்.
மாலை — வீடு திரும்பும் வழியில் செருப்பு வார் அறுந்தது — இது வேற கடுப்பேத்துதே—- நம்ம வீட்டுக்குப் போற பாதை வேற கரடுமுரடா இருக்குமே…
காலையில் பின் கொத்து வாங்கியது ஞாபகம் வர— செருப்பு வாருடன் சேர்த்துக் குத்தி சரி செய்தாள். ஏனோ … அந்தப் பெண்மணியின் நினைவு வர ….. இதைத்தான் பின் புத்தி என்கிறார்களோ ?
முற்றும்.