எழுத்தாளர்: வெ. முத்துராமகிருஷ்ணன்
படித்து முடித்த உடனேயே ரமேஷுக்கு ஐடியில் பெங்களூரில் நல்ல வேலை கிடைத்து அங்கு சென்று ஒரு தனி வீடு எடுத்துக்கொண்டு குடியிருந்தான். ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டதால் அவனுக்கு வயிறு பிரச்சினையாகிவிடவே அம்மாவிடம் தினமும் சமையல் எப்படி செய்ய வேண்டும் என்று வீடியோ காலில் கேட்டு செய்து சாப்பிடுவான் சமையல் செய்வது கூட எளிதாக இருந்தது ஆனால் அந்த பாத்திரம் துலக்குவது மிகவும் கடினமாக இருக்கவே அந்த அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு வயதான பெண்மணியை பாத்திரம் தேய்க்க அழைத்துக் வைத்துக் கொண்டான்.
அன்று ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால் 8 மணிக்கு எழுந்திருந்து கேஸில் பாலை வைக்க அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலிக்கவே சென்று திறக்க வேலை செய்யும் அந்த பணிப்பெண் நின்று கொண்டிருந்தார் அவர்கள் இருவரும் உள்ளே வருவதற்கும் பால் பொங்க ரமேஷ் இடுக்கியை தேடி எடுப்பதற்குள் கேஸ் முழுவதும் பால் அபிஷேகம் ஆகிவிட்டது. அதைப் பார்த்த அந்த பணிப்பெண் “ஏன் தம்பி பக்கத்தில் தண்ணீர் இருந்ததே துளி எடுத்து அதன் மீது விட்டிருந்தால் பால் பொங்குவது அடங்கி இருக்குமே” என்று சொல்ல ஆபிஸில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு”ஒன் மேன் ஆர்மி” என்று புகழப்பட்ட ரமேஷ் பணிப்பெண்ணின் இந்த சொற்களால் வெட்கி தலை குனிந்தான்.
முற்றும்.
