எழுத்தாளர்: வாசவி சாமிநாதன்
“என்னடி , ஹேமா தினமும்
இந்த பேக்கரி அயிட்டத்த வாங்காதேன்னு சொன்னா
கேட்க மாட்டியா “ என்று சாத்துக் கொண்டான் வசந்த் .
“அம்மா , எனக்கு “ என்று பிள்ளைகள் ஹேமாவின் காலைச்சுற்றி கொண்டது .
“ இரு “, “ இரு “ , தரேன் என்று கூறியவாறு பயத்துடன் வசந்தை பார்த்தாள் ஹேமா .
வசந்த் வேகமாக பிள்ளைகள் தட்டிலுள்ள ஒரு பர்பியை எடுத்துக்கொள்ள பிள்ளைகள்சினுக்கியன.
வசந்த் கோபத்துடன் “ஏப்பா , ஸ்வீட் சாப்பிடாதீங்கன்னு எத்தனை தடவ சொல்றது, இப்பதான் 2 லட்சம் செலவு பண்ணிருக்கு திரும்பவும் எதையாவது தின்னிட்டு “ ….. என்று முனங்கினான் .
வசந்தின் அப்பா சட்டென்று முகம் வாடி இருக்கையில் அமர்ந்தான் .
“எங்க சும்மா “ இருங்கங்க என்று பரிதாபத்துடன் மாமனாரை பார்த்தாள் ஹேமா .
வசந்தின் அம்மா “ஏங்க நீங்க வாக்கிங் கிளம்புங்க “ என்று கூற
வசந்தின் அப்பா கிளம்பினார் .
அன்றிரவு அனைவரும் தூங்கிய பின் வசந்த் அப்பாவின் அறையில் நுழைந்த வசந் அம்மா இரண்டு பர்பிகளை நீட்டினாள் .
பதிலுக்கு வசந்தின் அப்பாவும் பர்பியை நீட்ட இருவர் கண்களில் நீர் வழிய பர்பியை சாப்பிட்டனர்.
முற்றும்.