10 வரி போட்டிக் கதை: திருமணம்

by admin 1
139 views

1. “கெளதம் கெளதம்”, “வெளிச் சத்தமே கேக்க கூடாதுனு ஹெட்போன்  போட்டு விளையாடுறது தெரிஞ்சும் நீ கூப்டறபாரு உன்ன நெனச்சாதான்  பாவமா இருக்கு” என பாலாஜி தன் மனைவி வித்யாவிடம் சொன்னார்.

2.  தொடர்ந்து “இப்படி விளையாட்டுத்தனமா இருக்குற புள்ளைக்கு 27 வயசாச்சு கல்யாணத்துக்கு வரன் பாக்கணும்னு சொல்ற, அவனுக்கு முதல்ல பொறுப்பா எப்படி இருக்கணும்னு சொல்லிக் கொடு, அப்புறமா பொண்ணு பாக்கலாம்”  என்றார்.

3.  உடன் வித்யா “இப்ப அவன் என்ன பொறுப்பா இல்ல, நல்ல வேலை கை நெறைய சம்பாத்தியம், எந்த கெட்ட பழக்கமும் இல்ல வேற என்ன வேணும் சும்மா அவன குறை சொல்லாம இருக்க முடியாது உங்களுக்கு” என சொல்லியபடி கெளதம் அருகில் சென்று தட்டினாள்.

4.  திரும்பி பார்த்த கெளதம் “என்னம்மா” என சாப்பிட வா என ஜாடை காட்ட “அரைமணி நேரத்துல வரேம்மா” என மறுபடியும் விளையாட்டில் ஒன்றினான்.

5.  “ஆமா, கல்யாணத்த பண்ணிண்டு அந்த பொண்ணும் இப்படி ஜாடைல குடும்பம் பண்ணுமா” என்ற கணவரின் வாயை சைகையால் மூட, கெளதமுக்கு திருமணமானால் சரியாகி விடும் என்பது அம்மாவின் எண்ணம்.

6.  திருமணத்திற்கு பெண் பார்க்கணும்னா இதை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் வெறித்தனமாக விளையாடக் கூடாது என்பது அப்பாவின் எண்ணம்.

7.  அரைமணி கழித்து சாப்பிட வந்த கெளதமிடம் அம்மா நல்லபடி எடுத்து சொன்னாள் “கண்ணா வயசாறது நல்ல வேலை சம்பாத்தியத்துல இருக்க கல்யாணத்துக்கு  வரன் பாக்கலாமா நீ என்ன சொல்றப்பா” என ஆதரவாக தலை கோதியபடி கேட்டாள்.

8.  “ம்ம் பாரும்மா, நீ கேக்கறது புரியறதுமா நீ சொல்ற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்” என்றான் கெளதம்.

9.  வித்யா சந்தோஷத்தில் “சரிப்பா” என மகனிடமும் ” பாத்தீங்களா நம்ம புள்ளய இப்படி எத்தன புள்ளங்க அம்மா அப்பா சொன்னத கேக்கணும்னு இருக்கா, ” என கணவனிடம் பெருமிதமாகப் பட்டாள்.

10. “உங்கம்மா புள்ள மேல பாசத்துல சொல்றா சந்தோஷம் தான் ஆனா கெளதம் நீ கொஞ்சம் யோசி, கல்யாணம்னு புதுசா ஒரு பொண்ணு உன்ன நம்பி வரப் போறா, அவளோட பேச பழகன்னு நெறைய இருக்குடா, நீ அப்பவும் இந்த கேம்ஸ்ல இருந்தா அந்த பொண்ணோட நிலை, கொஞ்சம் யோசி கெளதம் ப்ளீஸ்” என முதல் முறையாக அப்பா சொல்வதிலும் அர்த்தம் இருக்கு என யோசிக்கலானான் கெளதம்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/14143-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!