எழுத்தாளர்: நா.பா.மீரா
குட்டிக்கண்ணா ….சமத்தா மிச்சம் வைக்காம சாப்பிட்டிடனும் … இல்லாட்டி டைனோசர் வந்து உன்னை முழுங்கிடும் .
பயத்தால் முகம் வெளிறிய அந்த இரண்டு வயதுப் பேரன் பாட்டி ஊட்டியதை வேகமாக விழுங்கினான்.
பாட்டி … நா சின்னப்பையனா இருக்கறப்போ புடிச்சு நீக இத விடவே இல்லை.டைனோசர்னு ஒன்னு உண்மையிலேயே இருக்கா? இல்லைன்னா சும்மா எங்களை பயமுறுத்தறதுக்காக நீங்களா கற்பனை பண்ணிச் சொல்றீங்களா?
பெரிய பேரன் யுகன் கேட்க …..
ஏண்டா கண்ணா … கார்ட்டூன் அனிமேஷன்ல விலங்குகள் எல்லாம் பேசற மாதிரி காமிக்கிறாங்களே …. அதெல்லாம் உண்மையான்னு ஆராய்ச்சியா பண்ணிக்கிட்டிருக்கே …..போவியா ….
மெளனமாக நகர்ந்தான் யுகன்.
முற்றும்.