எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன்
மலை அடிவார கிராமத்தில் ஒரு குடிசையில் ராமு தன் பெற்றோருடன் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான்.
தூக்கத்தின் இடையில் ஏதோ ஒரு சத்தம் அவனை எழுப்பிக் கொண்டே இருந்தது.
அந்த கிராமத்தில் மின் விளக்கு தெரு கம்பங்களில் மட்டுமே.
பக்கத்தில் இருந்த மண்ணெண்ணெய் விளக்கை ஏற்றி கொண்டு வெளியே வந்தான்.
அங்கு ஒரு ஓநாயின் கால் எலி பொறியில் மாட்டிக்கொண்டு துடிப்பதைப் பார்த்து , ராமு சிறிதும் பயமின்றி பொறியில் இருந்து அதன் காலை விடுவித்தான்.
ஓநாய் ராமுவை நன்றியுடன் பார்த்து விட்டு நகர்ந்தது.
அந்த கிராமத்தில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ராமுவின் பள்ளிக்கு சைக்கிளில் வேகமாகச் செல்லும் சமயம் ஒரு இரு சக்கர வாகனத்தில் மோதி கீழே விழுந்து விட்டான்.
எங்கிருந்தோ பாய்ந்து வந்த ஓநாய் ராமுவின் சட்டையை வாயில் கல்விக் கொண்டு வேகமாக ஆஸ்பத்திரி சென்று அவனை நுழை வாயிலில் போட்டு விட்டு காத்திருந்தது
மருத்துவர்கள் விரைந்து வந்து அவனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய பின்னர் ஓநாய் அவ்விடத்தை விட்டு நகர்ந்தது.
‘ஓநாய் நண்பேன்டா’ என்ற தலைப்பில் இந்த நிகழ்வு வைரலானது
முற்றும்.