எழுத்தாளர்: நா.பா.மீரா
அப்பா… பல்சர் பைக் வாங்கலாமாப்பா …. விழிகளிலும், குரலிலும் ஏக்கம் தொனிக்கக் கேட்டான் பாலாஜி.
விரலுக்குத் தகுந்துதான் வீங்கணும் தம்பி …நமக்கெல்லாம் சைக்கிளே பெரிய விஷயம் … சொல்லிய தந்தையை நிராசையுடன் வெறித்தான் பாலாஜி.
பள்ளிப்படிப்பு முடிந்து …கல்லூரி சேர்ந்தவன் பகுதிநேர வேலை பார்த்துச் சேமிக்க …
எவ்வளவு பிடிவாதம் பார்த்தியா …அப்படியென்ன பல்சர் வெறியோ தெரியலை…
ஒரு குறிப்பிட்ட தொகை சேர்ந்தவுடன் ..குறைவான தவணைத் தொகையில் பல்சர் வாங்கி… அப்பா வாங்க …வந்து ஓட்டுங்க …. வண்டி உங்களுக்குத்தான் …
விழிகளில் நீர் பெருக …மகனைக் கட்டி அணைத்துக் கொண்டார் அந்தத் தந்தை.
முற்றும்.