10 வரி போட்டிக் கதை: தந்தையின் அருமை

by admin 2
77 views

சிவாவை திருமணம் முடித்து வந்த மிருதுளா அவன் எப்போதும் காலையில் எழுந்தவுடன் ஒரு பெட்டியை திறந்து பார்ப்பதும் பிறகு அதை மூடி உள்ளே வைத்து பூட்டி சாவியை வைத்துக் கொள்வதை பார்த்தாள். யாராக இருக்கும் ஏதாவது பழைய காதலியாக இருக்குமா என்று சந்தேகமாக இருந்தது. கேட்டால் பதில் கிடைக்குமா என்று தெரியவில்லை.  அன்று கதவை மூடாமலேயே சிவா அந்த பெட்டியை திறந்து பார்ப்பதையும் அதில் ஒரு ஸ்பேனர் இருப்பதையும் பார்த்தவுடன்  ஆச்சரியத்துடன்  “ஏங்க இதையா கும்பிடறீங்க என்ன இது?” என்று கேட்டவுடன் அவன் கோபத்துடன் “ஏன் இங்கு வந்தாய்?” என்று கேட்டுவிட்டு பிறகு அவளுடைய முகம் சோகமானதை பார்த்து “இது என் தந்தை வைத்திருந்தது அவர் இரண்டு சக்கர வாகன ரிப்பேர் செய்யும் ஒரு கடை வைத்திருந்தார் அதில் உழைத்து தான் என்னை படிக்க வைத்து இப்படி ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தார். நான் நல்ல நிலைமைக்கு வந்த உடனேயே அவர் ஒருநாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவர் உழைப்பையும் அருமையையும்  புரிந்து கொண்ட நான்  ஞாபகமாக இதை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன்” என்று கண்கள் கண்ணீருடன் சொன்னவுடன் கணவனை  சந்தேகப்பட்டதை எண்ணி வெட்கப்பட்டு “அப்படியாங்க?” என்று தானும் அந்த ஸ்பேனரை கும்பிட்டாள்.

நன்றி  

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!