எழுத்தாளர்: நா.பா.மீரா
வள்ளி தன் பிடியிலிருந்து தளரவேயில்லை. போயும் ..போயும் வேலைக்காரி மககிட்டே …அதுவும் வாய் பேச முடியாத ஊமை ….இப்படியா கேடுகெட்டு நடந்துக்குவான் இந்த மகேஷ் …
மனத்துள் புழுங்கிய உமையாள் … இக்கட்டான சூழ்நிலையை கணவன் சர்வேஸ்வரனிடம் கூற….
எம்புள்ளைதான் தப்பு பண்ணான்னு நிரூபிக்க என்ன ஆதாரம் இருக்கு உன்கிட்ட … பேசாம நாங்க கொடுக்கிற பணத்தை வாங்கிக்கிட்டு ….காதும் காதும் வைச்சா மாதிரி உம்மக பூங்குழலியோட கர்ப்பத்தைக் கலைச்சிடு..
மரபணுச் சோதனையில் மகேஷ்தான் குற்றவாளி என்பது நிரூபணமானது.
மகளிர் போலீஸ் திருமணத்துக்கு வற்புறுத்த…
எங்களுக்கு மானம்தான் உசிரு … மகளுடன் கம்பிரமாக வெளியேறினாள் வள்ளி.
நன்றி