எழுத்தாளர்: அனுஷாடேவிட்
“அடியேய் பவளவள்ளி உன் மாமன என்ன வெஞ்சனவ? சமுத்திரத்துக்கு தன்னத்தனியா தோணியில போறாக. தடுக்க போன எங்காப்பார சோலிய பாரும் எனக்கு பவளம் வேணும்னு கோவமா கிளம்பிட்டாக” தோழி கமலம் அரக்க பரக்க ஓடிவந்து கத்தினாள்.
“என்னடி சொல்றவ? அவுக போனத நீ கண்ணார பாத்தியா?” பவளவள்ளி கண்ணீருடன் வினவினாள்.
“ஆமாங்கென். நான் என்னாதுக்கு புள்ள பொய்யி சொல்லோனும்? என்ன நடந்ததுனு சொல்லு புள்ள”
நடந்ததை விசும்பலுடன் சொன்னவள் அப்படியே தரையில் மடிந்து அமர்ந்தாள். மூன்று நாட்கள் அழுகையுடனே அன்ன ஆகாரமின்றி கழிந்தது.
“அடியேய் பவளவள்ளி… பவளவள்ளி… உன்ற மாமன் வராக. என்ன கொண்டு வராகனு பாரு” என்று கமலம் ஓடிவந்தபடியே சொன்னாள்.
“யோவ் ஏன்யா இப்படி பண்ண? உன்னை இனிமேல்ட்டு காண முடியாதோனு எம்புட்டு பயந்தேன் தெரியுமா? என்மேல கோவம்னா நாலு அடி கூட அடிச்சிக்கோ இனி இப்படி போவாத” என்று அவனை அணைத்து கண்கலங்கினாள்.
“ஏபுள்ள கோவமாம்ல கோவம். உன் மேல அம்புட்டு நேசம் புள்ள. நீ தானே சொன்ன நாம கண்ணாலம் கட்டனும்னா என் பேர்ல இருக்க பவளத்துல தான் தாலி வேணும்னு சொல்லிப்புட்ட.
அதான் சமுத்திரதாய் கிட்ட போய் வாங்கியாந்தேன்” மீனமுதன் பரிவுடன் சொன்னான்.
“அதுக்கு இப்படி உசுர பணயம் வைக்கனுமாயா? உன்ன கண்ணால பாக்குற வரைக்கும் எனக்கு உசுரு இல்லயா”
“நேத்தே வந்துபுட்டேன் புள்ள. சமுத்திர தாய் தந்த பவளத்தை தாலியா கோத்து மாத்தி எடுத்தார இம்புட்டு நேரமாயிட்டு” என்று பவளமணியிலும் பவளகொடியிலும் கோர்த்திருந்த நகையை எடுத்து காண்பித்தான்.
“சீக்கிரம் கண்ணாலம் கட்டனும் புள்ள. உன்னை மாதிரி பொண்ணு ஒன்னு என்னை மாதிரி பையன் ஒன்னு பெத்து கொடு” என்று மீனமுதன் சொல்ல பவளவள்ளியின் வதனம் பவளங்களை விட ஜொலிக்க வெட்கத்தில் அவனின் மார்பில் தலைசாய்ந்துக் கொண்டாள்.
முற்றும்.