10 வரி போட்டிக் கதை: அறியாமை 

by admin 2
52 views

அங்கிள்…. ஸ்பானர் இருக்குமா …கேள்வியாகப் பார்த்த கிருஷ்ணனிடம்  ….மோட்டார் தண்ணீர் எடுக்க மாட்டேங்குது … பிளம்பரக் கூப்பிட்டா இதோ …அதோன்னு இழுத்தடிக்கிறார்.

 ஊருலேருந்து வந்திருக்கற அப்பா  …. எவ்வளோ சொன்னாலும் கேக்காம தான் பார்க்கிறேங்கராரு .. சலிப்புடன் விவரித்த விக்ரம்  … நன்றி கூறிப் புறப்பட்டான்.

ஸ்பானர் கொண்டு இப்படியும்.. அப்படியும் திருகி … ஒரு வழியாய் மோட்டார் எடுக்க …ஒரே ஆச்சரியம் விக்ரமுக்கு .

எப்படிப்பா … இது  போலத்தான் அடிக்கடி ஏதோ பண்ணி … ஐந்நூறு ரூபாய் மொய் வைக்கணும் எங்க பிளம்பருக்கு …

மதியம் அந்தப்பக்கமாக வந்த கிருஷ்ணனிடம் ஸ்பானரைத் திருப்பிகொடுத்த நாராயணன் வெறும் காத்தடைப்பு பிரச்சனை ….ஊம் .. இதுக்குப் போயி பிளம்பராம் … காசுதான் தண்டம்…. தலையசைத்து நகர்ந்தார் கிருஷ்ணன்.

முற்றும்.

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16298-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!