10 வரி போட்டிக் கதை: கொய்மீன் -சவால் 

by admin 2
61 views

அப்பா …நா ஏதாவது பாராமெடிக்கல் கோர்ஸ் சேர்ந்துக்கலாம்னு  இருக்கேன் .மூணு முறை நீட் தேர்வு எழுதியும் ஒரு மார்க்  வித்தியாசத்துல MBBS சீட் கிடைக்கல …விரக்த்தியாகச் சொன்ன மகன் விபினை ஆதுரமாகத் தடவிக் கொடுத்தவர் …

ராஜா ….எதையுமே நாங்க உன் மேல திணிக்கல …மருத்துவர் ஆகணும்கிறது உன் கனவு.. இப்ப பின்வாங்குற ….

ஜப்பானில … கொய்மீன்கள் ..அப்படின்னு  ஒரு வகை … மிகவும் வலிமையான அந்த மீன்கள் பல தடைகளைத் தாண்டி ஏறுமுகமாக நீந்தி மேலே  செல்லுமாம் …

சவால்களைச் சந்திக்கிற உறுதிக்கும், விடாமுயற்சிக்கும் ஜப்பானியர்களுக்கு இந்தக் கொய்மீன்கள்தான் தூண்டுகோலாம் …

நீட் தேர்வுப் புத்தகங்களைத் தேடி எடுக்கத் தன் அறைக்குச் சென்றான் விபின்.

 நன்றி    

போட்டியில் கலந்துக் கொள்ள: 

https://aroobi.com/16643-2/

முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க:  https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/

You may also like

Leave a Comment

error: Content is protected !!