எழுத்தாளர்: நா.பா.மீரா
காய்மா…காய் ….தனபாக்கியம் … கொரோனா காலத்தில் தொடங்கி…. இன்றும் விடாமல் கூவி விற்கும் , பிரஷ்ஷான காய்கறிகளுக்கு அந்த ஏரியாவில் தனி மவுசு.
பரங்கிப்பத்தை வைச்சிருக்கியா , கேட்டபடி அருகில் வந்தாள் வாசுகி .
என்ன …தங்கக் கலர்ல இருக்குங்கிறதுக்காக தங்கம் விலை சொல்றியே … விடாப்பிடியாக பேரம் பேச கொடுத்துவிட்டு நகர்ந்தாள் தனபாக்கியம்.
தாயின் நினைவு நாளுக்குப் பணம் கட்ட வழக்கமாக வரும் ஆசிரமத்திற்கு வந்த வாசுகி …எதேச்சையாக தனபாக்கியம் வெளியே செல்வதைக் கவனித்தவள் … நிர்வாகியிடம் விசாரிக்க ….
பெரிய குடும்பம் …கஷ்ட ஜீவனம்தான் ….ஆனாலும், காய் விற்று வருகிற லாபத்துல ஒரு பகுதி மிச்சப்படுத்தி …. மாசாமாசம் டொனேட் செய்யிறாங்க …
ஏனோ, மனதளவில் குறுகியதாக உணர்ந்தாள் வாசுகி.
முற்றும்.