எழுத்தாளர்: குட்டிபாலா
குருவாயூர் கோவிலில் அதிகாலை 3 மணி.
“வேஷ்டி கூட வாங்கி வைத்துவிட்டேன். என்ன ப்ளைட் லேட்டா?”
வரிசையில் எனக்கு முன்னால் நின்று இப்படி மொபைலில் பேசிக் கொண்டிருந்த பெண்ணிடம்(கமலா) தயங்கியபடி “வேஷ்டி வாங்க மறந்துவிட்டோம். கொடுத்து உதவ முடியுமா?” என்று கேட்டேன்.
“இது கல்யாணமாகாதவர்களுக்கான நாலுமுழவேஷ்டி” என்றதற்கு
“என்அண்ணனின் கல்யாணம்வேண்டிதான் நாங்களும் வந்துள்ளோம்.
இன்றிரவே யு.எஸ். திரும்புகிறோம். ப்ளீஸ்” என்றேன்.
தயங்கியவாறே தந்தவளிடம் மொபைல் நம்பர் வாங்கிக்கொண்டேன்.
அந்த அறிமுகத்தால் இன்று அவள் என் அண்ணி கமலாஹரிஷ்.
முற்றும்.