துள்ளி குதித்து நழுவி
விழும் பனி நீர் பறவையே
உன்னை பார்க்கும் பொழுது
என்னை மறந்து
சிறுபிள்ளை ஆகி விடுகிறேன்.
நீர் பறவை என்ற உன்
பெயரிலேயே மயங்குவதற்கு காரணம் துள்ளி துள்ளி
கரணம் அடிக்கும்
உன் செயல் தான்.
வெள்ளை உடலுடன்
கொள்ளை கொண்டு
தத்தித்தத்தி நடக்கும்
நடையில் மயங்குவதால்
மடை திறந்த சந்தோஷமும்
என்னை ஆட்கொண்டு
விண்ணை தொடுவது போல
உணர்ந்து மகிழ்ந்தேன்.
உஷா முத்துராமன்