எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
சொல்: ஊஞ்சல்
ஒன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியை நீலா அரிச்சுவடி சொல்லிக் கொடுத்துக் கொண்டு இருந்தார். அதில் அ- அம்மா முதல் ஊ – ஊஞ்சல் என்று படத்துடன் சொல்லிக் கொடுத்தார்.
“டீச்சர்…! ஊஞ்சல் எப்படி இருக்கும்? ” ஆர்வமுடன் கேட்டாள் மதுமிதா.
“கிராமத்தில மரத்தின் கிளையில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம். ஜாலியா இருக்கும். இப்ப யார் விளையாடறாங்க…”
“ஊஞ்சல் பார்த்தது இல்லை.”
“உங்க வீட்டுக்கிட்ட பார்க் எதுவும் இல்லையா? “
“டீச்சர்… நான் விடுதியில இருக்கேன்”
“டீச்சர்..! அவ. பக்கத்தில இருக்கிற அநாதை இல்லத்தில அம்மாவோட இருக்கா. வெளியில எங்கேயும் போக முடியாது”
“உங்க அம்மா அங்க வேலையில் இருக்காங்களா?.”
“ஆமாம் டீச்சர். நானும் அம்மாவும் அங்க இருக்கோம்.”
“சரி .. இப்ப பாடம் படிப்போம்.”
அனைவருக்கும் ஊஞ்சல் பற்றிய நினைவே.
அடுத்த நாள் பள்ளி வந்த குழந்தைகளை மைதானத்தில் இருந்த இரண்டு ஊஞ்சல்கள் வரவேற்றன. ஆசிரியை கட்டிப் பிடித்து நன்றி சொன்னாள் மது.”
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.