எழுதியவர்: நா.பா.மீரா
சொல்: விரல்
அம்மா நா இந்தி டியுஷனுக்கு இனிமே போகமாட்டேன்.
ஏம்மா, என்னாச்சு? மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் தாராவைக் குழப்பத்துடன் ஏறிட்டாள் மாதங்கி.
பதில் சொல்லாமல் நகர்ந்த பேத்தியை சிறிது நேரம் கழித்துத் தன் ரூமுக்கு அழைத்து விவரம் கேட்ட பாட்டியிடம் ….
அந்த மிஸ் தினம் ஒரு ஸ்லோகம் கத்துக்கொடுத்து மனப்பாடம் செய்யச் சொல்றாங்க. அது கூடப் பரவாயில்ல. அவங்க வீட்டுல வேலை செய்யறவங்களோட பொண்ணு எங்கோ தூரத்துல இருந்து கேட்டு கரெக்டா ஒப்பிகிறாளாம். உங்களால ஏன் முடியிலன்னு டெய்லி ஒரே டார்ச்சர் .அந்தப் பொண்ணு ஸ்கூலுக்கெல்லாம் போகல .. இது மட்டும்தான் , எங்களுக்கு அப்படியா..
தாராக்குட்டி, நம்ம அஞ்சு விரல்களும் ஒரே மாதிரியா இருக்கு. சுட்டுவிரல் செய்யற வேலைய கட்டைவிரல் செய்யமுடியாதுதானே? கடவுளோட படைப்பு அப்படி .
ஸ்லோகம் சொல்லிப் பழகுறது நம்ம மனசுக்கு அமைதியைத் தரும். உன்னால முடிஞ்ச அளவு சொல்லு …மிஸ் புரிஞ்சிக்குவாங்க ..என்ற பாட்டியை அணைத்து முத்தமிட்டாள் தாரா.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.