எழுதியவர்: மித்ரா சுதீன்
சொல்: முட்டை
“அம்மா “என்று அழைத்த படி வந்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கதிர்.
“வாடா கை கழுவிட்டு வா சாப்பிடுவ”என்றாள் அம்மா ஆனந்தி
“தமிழ் பேப்பர் குடுத்தாங்களா?”என்றபடியே சாப்பாட்டு தட்டை நீட்ட
அவனும் பதிலுக்கு அம்மா கேட்ட பேப்பரை நீட்டினான்.
வாங்கி பார்த்தவள் முழுதும் பார்த்து திருப்தி பட்டாலும் அவனிடம்
“எல்லாமே கரெக்டா தானே எழுதி இருக்க ஆனா ஏன் மார்க் குறஞ்சிருக்கு ?”
கதிர் அந்த குறிப்பிட்ட பக்கத்தை எடுத்து காட்டினான்.
“இதனாலத்தான்”என்றான் அதை காட்டியபடி
கோழிப்பண்ணை பற்றிய கட்டுரைதான் அது .
அதை முழுதும் படித்து பார்த்தவள் மீண்டும் புரியாமல் அதே கேள்வி கேட்க
“மெய் எழுத்துக்கு புள்ளி வைப்பதற்கு பதில் முட்ட அதாவது சின்னதா வட்டம் போட்டிருக்கேன் பாரு அது தப்பாம்.
எனக்கு ஏற்கனவே சொன்னாங்க நா மறந்துட்டேன் அதனால் மார்க் குறஞ்சிச்சு.”
ஓ
இப்படி ஒரு விஷயம் இருக்கா!? ” ,”இனி இப்படி செய்யாத” என்றாள்.
முற்றும்.
📍 போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.