எழுதியவர்: வாசவி சாமிநாதன்
மெய் எழுத்து வார்த்தை: ம்ஹீம்/ம்
“ டேய் என்னடா இன்னிக்கு வாக்கிங் வரலயா “ என்றான் மணி .
“இல்ல, மச்சி நாளைக்கு பார்க்கலாம் “என்றான் வசந்த சுருதி குறைவாக சந்தத்துடன்.
“ என்னடா டோன்னே சரியில்லை என்ன விசயம் சொல்லுடா “என்றான் மணி .
“அது வந்து வந்து தயங்க படி இரு சொல்றேன் “ சுற்றியும்முற்றியும் பார்த்தப்படி. வசந்த .
“டேய் தம்பி உள்ளே போய் படி “ என்றான் தன் மகன் ஹேம்நாத்தை
“சரிப்பா “ என்று அப்பாவின் முகத்தை பார்த்தப்படி உள்ளே சென்றான்ஹேம்நாத்
“டேய் வசந்த் லைன் இருக்கிற யா “ என்றான் மணி
“இருக்கேன் இருக்கேன் “ என்றான் வசந்த் சரி சொல்லு என்றவனுக்கு “ அது ஒன்னுமில்லடா , ஏ மனைவி என் கிட்ட பேச மாட்கிறா , எத கேட்டாலும் “ம்“.இல்ல “ ம்ஹீம் “ இந்த இரண்டு
வார்த்தை தவிர வாயவே திறக்க மாட்டிகிறா ,எப்பவும் தொன தொன பேசறவ வீடே நிசப்தமாக இருக்கு ,
அதுதான் மனசே சரியில்ல நைட் சரியாவே தூங்கல “ என்று புலம்ப ஆரம்பித்தான் .
“டேய் எங்கயாவது கூட்டி போடா எல்லா சரியாயிடும் “என்றான் மணி
“நீ வேற எங்க கூப்பிட்டாலும் “ம்ஹீம்”ன்னு வர மாட்டிகிறா என்றான் வசந்த் .
“ஏ பிரண்ட் ஒருத்தன் சைக்காலஜி டாக்டர் இருக்கான் அவன்கிட்ட கூட்டிட்டு போடா , நான் அவ அட்ரஸ் சென்ட் பண்றேன் எல்லா அவ பாத்துக்குவான் என்றான் மணி .
வசந்த்க்கு மனம் சற்று குளிர்ந்தப் “ ம்” என்றான்
“சரி டா நானும் வாக்கிங் முடிச்சிட்டேன் டாக்டர்கிட்டு போய்ட்டு வந்துட்டு சொல்ற டா “ என்றான் மணி .
சுறு சுறுப்பாக குளித்துவிட்டு கோவிலுக்கு தன் மகனுடன் சென்றான் வசந்த் . சாமிகும்பிட்டப்படி தனது வேண்டுதலை வைத்தான் வசந்த் பிரகாரம் சுற்றி முடிந்து மகனும் வசந்த்தும் இருவரும் .அமர்ந்தனர்
“அப்பா நீங்க ஏன் அம்மாக்கிட்டேயே பேசாததற்கு காரணம் கேட்க வேண்டிய
தானே அப்பதானே அம்மா எதுக்கு பேசாம இருக்காங்கன்னு தெரியும் “என்றான் ஹேம்நாத் .
“நீங்க அங்கிள்கிட்ட பேசினத கேட்டேன் இப்ப சாமிக்கிட்டு யும் அதையே சொல்றீங்க ஆனா அம்மாக்கிட்ட எதுவுமே கேட்கல , ஏன் ? என்றான் ஹேம்நாத் வசந்தக்கு நெற்றியில் அடித்தாற்போல் இருந்தது.
வேகமாக வீட்டிற்கு வந்து தன் மனைவியிடம் பேச அவள் சைகையாக தனக்கு பல்வலி என்று கூறினாள் உடனே டாக்டரிடம் அழைத்து சென்று மருத்துவம் பார்த்தான் வசந்த் . மனைவி சரியானதும் நடந்ததை கூறினான் வசந்த்
“ ம்” “ம்” என்றாள் வசந்த்தின் மனைவி
“ திரும்பவுமா “ என்றான் வசந்த்
குப்பீரென்று சிரித்தனர் மூவரும்
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.