எழுதியவர்: நா.பா.மீரா
மெய் எழுத்து வார்த்தை: புத்திசாலி/த்
கஜா நாம மீட் பண்ணி ரொம்ப நாளாச்சே , எங்க வீட்டுக்கு வாயேண்டா ….நண்பன் ராஜா.
ஏ ..மூதேவி ,கண்ணு முன்னால வராதேன்னு எத்தனைவாட்டி சொல்லிட்டேன் …உன் தரித்திரம்தான் என்னையும் ஆட்டிப் படைக்குது ..என் பிரெண்டப் பார்க்கப் போறேன், திரும்பி வர்றப்போ இங்க இருந்தேன்னா நடக்கறதே வேற…
கல்லூரித் தோழி காமினியிடம் போனில் புலம்பினாள் ராஜி.
வாடா கஜா … வரவேற்றவனிடம்
சிஸ்டர வர்ற வழியில பார்த்தேன் …ஏதாச்சும் வேலைக்குப் போறாங்களா? பரவாயில்லடா உன் கஷ்டம் உணர்ந்து கைகொடுக்கறாங்க.
நீ வேற …. சீக்கிரமே ஒரு வேலையத் தேடிக்கணும் .சும்மாத்தானே இருக்கீங்கன்னுட்டு , ஊர் சுத்தக் கிளம்பிட்டாடா ….
இது என்னடா கொடுமை …தையல் வேலை செஞ்சு …கஷ்ட சூழ்நிலையில கைகொடுக்குறவள கேவலமாப் பேசினோம் …
இங்க என்னடான்னா நெலைமையே தலைகீழா..இருப்பே கொள்ளாமல் கிளம்பிவிட்டான் கஜேந்திரன் .
தோழி காமினி வீட்டிலிருந்து திரும்பியவள், ‘எப்படி நம்ம ஐடியா …இல்லாத காலரைத் தூக்கிவிட ….பெருவிரல் உயர்த்தித் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான் ராஜா.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.