எழுதியவர்: குட்டிபாலா
மெய் எழுத்து வார்த்தை: பணம்/ம்
பரஞ்ஜோதி பெரும் பணக்காரர். ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வது வழக்கம். இம்முறை ஏனோ தனியாக புறப்பட்டார்.
திட்டமிட்டபடி அனைத்து தலங்களுக்கும் சென்று மைசூரிலிருந்து ஊட்டி வந்தபோது கார் விபத்துக்குள்ளாகி தலையில் அடிபட்டு மைசூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவரை பரிசோதித்த நரம்பியல் நிபுணர் சக மருத்துவரிடம் “இவர் சென்னையில் பெரும்புள்ளி. மூன்று மருத்துவக் கல்லூரிகள் வைத்துள்ளார். பதினைந்து வருடங்களாக ஒவ்வொரு சீட்டுக்கும் லட்சக்கணக்கில் வசூல் செய்து கொள்ளையடித்துள்ளார். நானும் இவரது கல்லூரியில் படித்தேன். ஆனால் அரசு கோட்டாவில். கொள்ளையடித்த கோடிக்கணக்கான பணம் கோமா நிலைக்கு போகவிருக்கும் இவரை காப்பாற்றுமா!” என்று பெருமூச்சு விட்டார்.
“இருப்பினும் தீர்ப்பை இறைவனிடம் விட்டுவிட்டு நம் தர்மத்தை நாம் கடைப்பிடிப்போம்” என்று சிகிச்சை முறைகளை விவரமாக விளக்கினார்.
பாவம். இது எதையும் அறியாமல் கடந்த ஆறு மாதங்களாக அரண்மனை போன்ற வீட்டில் தனி அறையில் நினைவின்றி கோமாவில் இருக்கிறார் பரஞ்சோதி.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.