எழுதியவர்: பா. அனிதா
மெய் எழுத்து வார்த்தை: மனம்/ம்
23 வருடமாக ஒரு பெண்ணின் மனம் அவளுக்கே புரியாத தருணம் இது. இது வரை காதல் என்றால் என்னவென்று தெரியாத அப்பெண் காதல் வயப்படுகிறாள். இந்த விஷயத்தை தன் தோழியிடம் அழுகையுடன் பகிர்கிறார் அவள். அவளது தோழிக்கோ அவ்வளவு ஆச்சரியம் கலந்த சந்தோஷம்.
அந்நிமிடமே அவளின் கைப்பேசியை எடுத்து அவனுக்கு போன் செய்தாள். அவளது தோழி அவனை கைப்பேசியில் அழைத்ததும் அவளுக்கு அதிக பதற்றம் நிறைந்த சூழல் ஏற்பட்டது. பிறகு அவள் காதலை அவனிடம் பதற்றத்துடன் கூறினாள். அவனுக்கோ ஆச்சரியம். பிறகு அவன் நான் உங்களை நேரில் சந்திக்கும் பொழுது கூறுகிறேன் என்றான். அவளுக்கு அந்நிமிடத்திலிருந்து பயமும் சந்தோஷமும் அவள் மனதில் இருந்தது. அவன் அவளுக்கு உரியவன் என்பதை அவள் முழுமையாக நம்பினாள்.
அடுத்த நாள் இருவரும் சந்தித்தனர். அவன் நான் ஏற்கனவே வேறு ஒருவரை விரும்புவதாக கூறுனான். இவள் மனம் உடைந்ததை எந்த ஒரு வகையிலும் அவனிடம் அவள் காண்பிக்கவில்லை. மனதில் கணத்துடன் அவனிடம் இருந்து விலகினாள்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.