எழுதியவர்: புனிதா பார்த்திபன்
மெய் எழுத்து வார்த்தை: நெஞ்சுரம்/ஞ்
நன்றாக இருந்த நண்பன்,தொழிலை இழந்து நொடித்துப்போய் விட்டதாய்
கேள்விப்பட்டபோது மனம் தவித்துப்போனது.வருமானமின்றி வறுமையில் எப்படித்
தத்தளிக்கிறானோ என நினைத்தபடி அவன் பிள்ளைகளுக்குக் கொஞ்சம் தின்பண்டம்
வாங்கிக்கொண்டு புறப்பட்டேன்.சோர்ந்து போயிருப்பானோ என நினைத்துக்கொண்டே
நான் கதவைத் தட்டியபோது,”வாடா”என என்றும் மாறாப் புன்னகையோடு வரவேற்றான்
நண்பன்.நான் கேள்விப்பட்டதை வருத்தத்தோடு அவனிடம் கேட்க, “ஆமாம்டா,
எதிர்பார்க்கவே இல்ல”என்றான். “சமாளிக்க முடியுதாடா?என்ன உதவினாலும்
கேளு?”என நான் ஆறுதலாய் கேட்கையில்,மீண்டும் புன்னகைத்தவன், “வீட்ல வறுமை
தான்டா, நல்ல சாப்பாட்டுக்கே கஷ்டம்னு வச்சுக்கோயேன். ஆனா, இந்த வறுமையக்
கடக்கமுடியும்ங்குற தைரியம் இருக்குடா.இந்தக்காலத்துல வறுமை வந்துட்டுப்
போச்சுன்னு சொல்லலாம், வறுமையிலேயே இருக்கேன்னு சொல்லமுடியாது. ஏன்னா
திரும்புற பக்கமெல்லாம் ஏதாவதொரு வேலையும், தொழிலும் இருக்கத்தான் செய்யுது.
என்ன கெளரவம் மட்டும் பார்க்கக்கூடாது. சீக்கிரம் மீண்டுருவேன்டா என்றவன் தேநீரை
நீட்டினான். “வேணாம்டா”என நான் மறுக்க, “வறுமைன்னு ஓஞ்சுபோய் உட்காராம ஓட
ஆரம்புச்சுட்டேன்டா, அதோட பலன் தான் இந்த டீ. அடுத்த தடவை நீ வரப்ப நல்ல
நிலைமையில இருக்கணும்னு வாழ்த்திட்டு மட்டும் போ” எனப் பிள்ளைகளுக்கு
வாங்கிவந்த இனிப்பையும் வாங்கமறுத்த நண்பனைக் கண்டு பெருமிதத்தோடு வீட்டிற்குத்
திரும்பினேன்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.