ஒரு நாள் போட்டி கதை: வெந்ததை தின்போம் , விதி வந்தால் போவோம்

by admin 2
52 views

எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் 

தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள்  தீ கோழியோடு !

ராமன் அவசர பணி காரணமாக அன்று சென்னை சென்று மறு நாள் அவனது ஊருக்கு திரும்ப வேண்டிய நிலையில் தீடீரென பிரபல அரசியல் தலைவர் மரணம் காரண மாக எல்லா போக்குவரத்தும் நிறுத்த பட்டது . செய்வதறியாது திகைத்த நிலையில் அந்த அலுவலக நண்பர் ஒருவர் ராமனிடம் ஒரு லாரி அந்த அலுவலகத்தில் பொருட்களை இறக்கி விட்டு குமரி மாவட்டம் செல்ல தயாராக இருப்பதாக கூறி அதில் ஏற்றி செல்லுமாறு கூறினார் .
ராமன் செய்வதறியாது திகைத்து ஆபத்திற்கு பாவமில்லை என்று கூறி லாரியில் ஏற தயாராகி விட்டான்,,
அந்த லாரியில் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மட்டும் தான் , இது தவிர இன்னும் ஒருவர் ஏற கூடிய அளவிற்கு இடம் இருந்தது .
ஓட்டுநர் ராமனிடம் ” சார் , சீக்கிரம் வாங்க , வேஷ்டி அல்லது கைலி கட்டிகோங்க , : இப்ப மணி நாலு , நாளைக்கு மதியம் 10 மணிக்கெல்லாம் நாம உங்க ஊருக்கு போய்விடலாம் :” என வாயில் பீடியை புகைத்த வாறு கூறினார் ,
ராமனுக்கோ புகை என்றாலே ஒரு வித அலர்ஜி . ஓரளவுக்கு ஆசாரமான குடும்பம் , என்ன செய்ய , வேறு வழி இல்லை என்று முடிவெடுத்து வேஷ்டிக்கு மாறி லாரியில் ஏறி உட்கார்ந்தும் விட்டான் . ஓட்டுனரும் , அவரது உதவியாளரும் மாறி மாறி பீடியை புகைத்த வாறு உடன் வந்தது ராமனுக்கு ஒரு வித கலக்கத்தை அளித்தது .

இந்த லட்சணத்தில் லார்ரி ஓட்டுநர் ராமனிடம் ” சார் , சும்மா ஒரு தம் பத்த வையுங்க , இந்த ராத்திரி பயணம் ரொம்ப சுகமாக இருக்கும் ” என்று கூறி யது ஒரு வித கலக்கத்தை அளித்தது .
” அதெல்லாம் எனக்கு பழக்கம் இல்லை , வேண்டாம் ” என்று கூறி இருவரையும் ஆச்சர்யத்துடன் பார்த்து ஒரு வித பய உணர்வுடன் உட்கார்ந்து வந்தான் .

ஒவொரு பத்து நிமிடத்திற்கும் இருவரும் மாறி மாறி பீடியை புகைத்தது ராமனுக்கு ஒரு வியப்பை அளித்தது .

ராமன் இது போல நிகழ்வுகளை பார்த்தது இல்லை , எனவே இந்த நிகழ்வு அவனுக்குள் ஒரு ஆச்சர்யத்தை அளித்தது , இரண்டு பேருமே பூர்வ ஜென்மத்தில் தீ கோழியாக பிறந்து தற்போதும், அந்த பழக்கத்தை தொடர்கிறார்களோ என வியந்தான் .
சற்று நேரம் கழித்து ராமன் அவர்களிடம் ” அண்ணே, ஏன் எப்படி இந்த கருமம் பிடித்த பீடியை குடித்து உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள் ? உங்க குடும்பத்தை சற்று நினைத்து எண்ணி பாருங்கள் ” என அறிவுரை கூறினான் .
அதற்கு அந்த ஓட்டுநர் , ” அய்யா , உங்க அறிவுரை நல்லதுதான் , சற்று எண்ணி பாருங்க ,,,,இரவெல்லாம் கண் விழித்து இந்த லாரியை ஓட்டும்போது நாங்க தூங்க கூடாது , இது எங்களுக்கு பழகி போய் விட்டது ,,, இந்த சனியன் பிடித்த கொரோனா சமயத்தில் எல்லோருக்கும் சிகிச்சை தேவை பட்டது , ஆனால் எங்களை போல ஓட்டுனர்கள் ஓரளவுக்குத்தான் முடங்கி கிடந்தோம் , பின்பு நாங்க வெந்ததை தின்போம் , விதி வந்தால் போவோம் , என எங்களுக்கு ஆறுதல் , அறிவுரைகள் கூறி துணிந்து போராட தயாராகி விட்டோம் ” என்று கூறியது ராமனுக்கு சற்று தெம்பை அளித்தது .
விடிய விடிய லாரியை ஓட்டி அதிகாலை 3 மணி வாக்கில் ஓட்டுனரும் , உதவியாளரும் சற்று கண் அயர்ந்தனர் ,

ராமனுக்கோ உறக்கம் வரவில்லை , அவன் போக வேண்டிய இடத்திற்கு இன்னும் எற குறைய நான்கு மணி நேரம் பயணிக்க வேண்டிய நிலையில் அலை பேசியை எடுத்து அவன் மனைவியிடம் இருந்து ஏதாவது செய்தி வந்துள்ளதா என்று பார்க்க துவங்கி விட்டான் .

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!