எழுதியவர்: குருமூர்த்தி
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பு: ஒரு நாள் ஆபாச நடிகரோடு !!
அது ஒரு உயர்தர மேட்டுக்குடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு. அந்த பக்கத்தில் ஒதுக்குபுரமாக இருக்கும், காலியாக இருந்த அந்த “சந்திரமுகி பங்களா”, திடீரென்று உயிர் பெற்றது. இது வரை, பல பெரிய பணக்காரர்கள் வசித்து வந்த அந்த பங்களாவில், இந்த முறை, யாரோ ஒரு சினிமா நடிகை வருவதாக, அரசல் புரசலாக பேசிக்கொண்டார்கள்.
சுற்று சுவர்கள் தங்களை எல்லாம் உயர்த்தி கொண்டன. ஜன்னல் கண்ணாடிகள், திடீரென்று கறுத்து போயின.
யாராக இருக்கும், அந்த நடிகை என, மனதில் பல வகையான எண்ணங்கள். அந்த பாமா விஜயம் என் வாழ்விலும் நிகழும் என்று நான் கொஞ்சமும் நினைத்து பார்க்கவில்லை. ஏனோ, அந்த படத்தை, வலைதளத்தில் தேடி, மீண்டும் ஒரு முறை பார்க்க தோன்றியது.
அந்த படம் மாதிரி, வீட்டுக்குள்ளே எல்லாம் போய் சிக்கலில் மாட்ட விருப்பமில்லை. எப்படியாவது அவர் வெளியே வரும்போது பார்த்துவிடுவது என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் எப்போது வீட்டிற்கு குடி வந்தார் என்று தெரியவில்லை, திடீரென்று ஒரு நாள், வீட்டில் விளக்குகள் எரிய தொடங்கின. ஒரு வேளை, இரவில் வந்ததிருக்கலாம் என்று நினைத்து கொண்டேன்.
மறுநாள், பகலில் பல முறை முயற்சி செய்தும், எந்த நடமாட்டம் வெளியே தெரியவில்லை. நானும், என் அலுவலில் மூழ்கி போனேன்.
அன்று இரவு பக்கத்து வீட்டு கார் கணைக்க தொடங்கியது, நான் ஓடிச் சென்று ஜன்னலருகில் நின்று கொண்டேன். அந்த நடிகை, காரில் ஏறுவதற்கு வெளியே வந்தார். வந்தவர் சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துவிட்டு காரில் ஏறிக் கொண்டார். அந்த நொடி, அந்த முகம் நன்றாக தெரிந்தது. யார் இந்த நடிகை என்று நான் யோசித்த வரையில் தெரியவில்லை. எந்த படத்திலும் பார்த்த மாதிரியும் தெரியவில்லை.
அந்த குழப்பத்துடனேயே உறங்கி போனேன்.
மறுநாள் பகலில் நோட்டம் விட்டேன். எந்த சலசலப்பும் தெரியவில்லை.
ஆபீஸில், நண்பர்கள் கேட்க தொடங்கினார்கள்.
என்னடா, டல்லா இருக்கே, என்ன விஷயம், என்றார்கள்.
ஒன்னுமில்லடா, உடம்பு சரியில்லை, என்று சொல்லி வைத்தேன்.
எங்கள் குரூப்பிலேயே, முற்றும் உணர்ந்த, எங்கள் உலக ஞானி, சீனுவிடம் மட்டும் தனிமையில் சென்று கேட்டேன்.
இதான், உன் பிரச்சனையா, விடு நான் கேட்டு சொல்றேன், என்றான்.
மறுநாள் அவனை காணோம். எனக்கு டென்ஷன் எகிறியது. வேலையே ஓடவில்லை.
அடுத்த நாள் வந்தான்.
என்னடா, என்று ஆரம்பித்தேன்.
சினிமா, பாணியில் தன் கண்ணாடியை கழட்டிவிட்டு சொன்னான் –
அவ சினிமா நடிகை இல்லை, இது வேற என்றான்.
வேற, என்றால்..
விளக்கினான். என் தலையும், மனமும் சுக்கு நூறாக போனது.
அப்படியே, உடைந்து போனேன்.
அங்க இருக்கறது உனக்கு நல்லது இல்லை, அப்புறம் உன் இஷ்டம் என்றான்.
இந்த வாரம், இரண்டு நாள் லீவு வருது, எங்காவது வெளியில் போயிட்டு வா, கொஞ்சம் ரிலாக்ஸ்டா இருக்கும், என்றான். அதுவும் நல்ல யோசனை என்று தோன்றியது. வியாழன் இரவு கிளம்பி விட்டு, திங்கள் வரலாம் என்று நினைத்திருந்தேன்.
அந்த வியாழன் இரவு, என் காரில், பாண்டிச்சேரி பயணமானேன்.
ஊர் எல்லையை தாண்டி சிறிது அந்த ஆளில்லா ரோடில் போய் கொண்டிருந்த போது, அங்கே தூரத்தில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அருகே யாரோ ஒரு பெண், இருந்த மாதிரி இருந்தது.
அந்த கார் , எங்கேயோ பார்த்த மாதிரி.. ஆங்…, நம்ம பக்கத்து வீட்டு கார்தான்.
அருகே சென்று நிறுத்தி விட்டு,
கிட்டே போகாதே, என்று சொன்ன நண்பன் மறந்து போனான். மனம் ஒரு குழப்பத்தில் இருந்தாலும், வாய் தன்னிச்சையாக,
“ஏதாவது உதவி தேவையா. .? ” என்றது.
அந்த பெண், தயங்கி கொண்டே, ஆமாம் சார், கார் ரிப்பேர், என்றாள்.
எங்கள் போகனும்.
பாண்டிச்சேரி…
வாங்க, என் காரில் போகலாம், நான் அங்கதான் போறேன். உங்கள் காரை, மெக்கானிக்கிடம் சொல்லி விடலாம், என்றேன்
நான் எப்படி… உங்க காரில்… தயங்கினாள்…
ஒன்னும் பிரச்சினையில்ல, பயப்படாதீங்க , நான் உங்கள் பக்கத்து வீட்டுக்காரன் தான், என்றேன்.
ஓ… தாங்கஸ் சார், உங்களை இவ்வளவு சீக்கிரம் பார்ப்பேன் என்று நினைக்கலை, என்றாள்.
நான் ஆச்சர்யமானேன்.. அப்படின்னா, என்னை சந்திக்க நினைச்சீங்களா..?
வாங்க பேசிக்கிட்டு போகலாம், என்றேன்.
ஆமாம், உங்களால் எனக்கு உதவ முடியும் என்று தோன்றியது, அதான்.
என்னாலா… எப்படி, ஆமாம் நீங்க யாரு, இப்ப எங்க போறீங்க… ? என்று கேள்விகளை அடுக்கினேன்.
சொல்றேன், என்று ஆரம்பித்தாள்.
ஆனால், நீங்க உதவரேன்னு வாக்கு கொடுங்க முதல்ல.. என்றாள்.
அவளை, பற்றி ஒரளவு தெரியும் என்பதால்., ஆனால்…. எதுவும், என்னால் முடிந்தால் மட்டுமே. அதுவும் சட்டத்துக்கு உட்பட்டு…. என்று இழுத்தேன்,
தாங்க்ஸ், என்று ஆரம்பித்தாள்.
“எனக்கு பூர்வீகம்…. ஊர்.நடுத்தர குடும்பம். எல்லோரையும் போல, நானும் காலேஜ் படிப்பு முடித்தேன்.
ஆனால் எனக்கு சினிமா ஆசை ஜாஸ்தி, உங்களை போல பார்ப்பது மட்டுமல்ல, நடிக்க வேண்டும் என்ற ஆசையும் ஜாஸ்தி.
என் சினிமா காதலை பார்த்து பயந்து போய், எனக்கு கல்யாணம் செய்தால் பொறுப்பு வரும் என்று திருமணம் முடித்தார், என் அப்பா
ஒ, நீங்கள், கல்யாணம், ஆனவரா..! யார் உங்கள் கணவர், என்றேன்.
சொல்றேன். என்றவர் சற்று அமைதியானார்.
பிறகு, அவரே தொடர்ந்தார்.
ஆனால், எனக்கு வாய்த்தவரோ, வீடு, வேலை…, என்று பொழுதை கழித்து கொண்டிருந்தார்.
கொஞ்ச நாட்களிலேயே, வாழ்க்கை போரடிக்க ஆரம்பித்தது. அவர் வீட்டில் இல்லாத நேரங்களில், மீண்டும், என் சினிமா கனவுகளை துரத்த ஆரம்பித்தேன்.
நான், ஆர்வத்துடன் கேட்டு கொண்டிருந்தேன்.
அங்கேதான், என் வாழ்க்கை பாதை திரும்பியது, என்றவர்.
இங்கே அந்த ஓட்டலில், சற்று நிறுத்துங்கள், ஒரு காப்பி சாப்பிடலாம் என்றார்.
எனக்கு லேசாக பயம் பிடித்து கொண்டது. ஏடாகூடமாக, மாட்டி கொண்டோம் என்று தோன்றியது.
காரை அந்த ஓட்டலில் நிறுத்தினேன்.
பேச்சை தொடர்ந்தாள்.
நான் அடிக்கடி, சினிமாவுக்கு வருவதை பார்த்த அந்த தியேட்டர் மானேஜர் பழக்கமானார். டிக்கட் வாங்க வசதியாக இருந்தது.
பிறகு ஒரு நாள், நீங்கள் சினிமாவில் நடிக்கிறீர்களா என்று கேட்டார். நெடுநாள் கனவு, நான் வானத்தில் பறந்தேன். ஆனால், என் கணவர் மறுத்து விட்டார். ஆசை யாரை விட்டது. கணவரை மீறி சென்றேன்.
அங்கே, ஷூட்டிங் என்ற பெயரில், ஏதேதோ செய்தார்கள். பயந்து போனேன். அதையே வைத்து என்னை மிரட்ட ஆரம்பித்தார்கள். வேறு வழியில்லாமல் அங்கே அடிமையானேன். பிறகு அதுவே பழகி விட்டது. கணவரிடம் சொல்ல பயம். வீட்டை விட்டு ஓடினேன்.
உங்கள் நிலை எனக்கு மிகுந்த மன வேதனை அளிக்கிறது. இதில், நான் வருத்தப்படுவதை தவிர, வேறு என்ன செய்ய முடியும்.
நீங்கள், உங்கள் கணவரிடம் சென்று, நடந்ததை சொல்லி, மன்னிப்பு கேட்கலாமே. அவர் எற்று கொள்ள வாய்ப்பிருக்கிறதே, என்றேன்.
அதற்கு தான் உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன், என்றாள்.
அதிர்ச்சியில், நான் எப்படி… யார் உங்கள் கணவர்.. என்றேன்.
உங்கள் நணபர் சீனு தான் , என் கணவர். அவரை தேடி வந்தபோது தான், நீங்கள் அவர் உற்ற நண்பர் என்று தெரிந்தது.
அவர் ஏற்று கொள்ள மாட்டார். இருந்தாலும், அவர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க தோன்றுகிறது., நீங்கள் உதவ வேண்டும், என்று என் கையை பிடித்து கொண்டு கதறினாள்.
நான், அப்படியே, அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
சீனுவிற்கு ஃபோன் போட்டேன்.
“டேய், என்னடா, இப்படி பண்ணிட்ட. இவ்வளோ பெரிய உண்மையை மறச்சிட்டியே. என்னை நீ நம்புவதாக இருந்தால், நீ உடனே, இங்கே வா, என்று இடத்தை சொன்னேன். .
அவன் வந்தான்.
சீனு பேச தொடங்கினான்.. நான் யார் அவளை மன்னிக்க, அவள் தன் தவறை உணர்ந்து, திருந்தினாலே போதும். ஆனால், என்னால் அவளை பழைய மாதிரி, பார்க்க முடியலடா, என்றான். என்னை கட்டாயப்படுத்தாதே என்றான்.
அவள், அவன் காலில் விழுந்தாள், ஆனால் எழுந்திருக்கவேயில்லை.
சீனு கணவனாக, தான் செய்ய வேண்டிய கர்மாக்களை செய்தான்..
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.