எழுதியவர்: ஆர். சத்திய நாராயணன்
ஆம்.
சிலருக்கு காதல் ஒத்து வருவது இல்லை. 7 அல்லது 8 தடவை பெண்களை காதலித்து தோல்வி அடைந்தவர் தான் ஸ்ரீ.
முதல் காதலியை நினைத்து ஒரு தூக்க மாத்திரை சாப்பிட்டார்.
இரண்டாவது காதலி மூஞ்சியில் அறைந்தது போல திட்டி விட்டார்.
இரண்டாவது தூக்க மாத்திரை சாப்பிட்டார். அழுது கொண்டே தான் இந்த முடிவுக்கு வந்தார்.
3….4….5…6…7…
ஆம். ஒவ்வொரு காதலியை நினைத்து தூக்க மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருந்தார்.
தனது முடிவை பரிசிலனை செய்தார். 8 தூக்க மாத்திரை சாப்பிட்டு விட்டார்.
திடிரென ஒரு எண்ணம். காதலில் வெற்றி பெற்று வாழ்ந்து காட்ட வேண்டும் என்று யோசித்தார். தற்கொலை முடிவு ஆகாது என யோசித்தார். ஏன்? மீண்டும் யாரையாவது காதலிக்கலாமே…! என யோசித்தார்.
9 வது மாத்திரை சாப்பிடாமல் ஒரு சொம்பு முழுக்க முழுக்க உப்பை போட்டு மட மட என குடித்தார்.
ஆம்.
வாந்தி எடுத்து விட்டார்.
உயர் பிழைத்தார்.
அடுத்து யாரை காதலிப்பது…?
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.