எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
மதுரை.
நான் புரட்சிகரமான ஒரு அமைப்பில் இருந்தேன். நாங்கள் 5 பேர் விஸ்வநாதபுரத்தில் வீடு எடுத்து தங்கினோம். பக்கத்து வீட்டில் டிகிரி முடித்து விட்ட சாந்தி.
ஆம். அவள் பெயர் சாந்தி. அவளை பார்த்ததுமே எனக்கு பிடித்து போய் விட்டது.
தினமும் காலை 6.40 க்கு சாந்தி வாசல் தெளித்து கோலம் போடுவார். நான் அந்த 15 நிமிடங்கள் மட்டுமே வாழ்ந்தேன். அமைப்பில் எனக்கு பெரிய பொறுப்பு. என்னால் அமைப்பில் சொல்ல முடியவில்லை. சாந்தி இடமும் சொல்ல முடிய வில்லை.
வேலை இல்லாமல் சமூக சேவை செய்பவனுக்கு யார் பெண் தருவார்கள்…?
அவள் குரல் அமிர்தம். அவர் வீட்டில் சத்தமாக ( நான் கேட்க வேண்டும் என்று) பாடுவார். அவருக்கு என்னை பிடித்து இருந்தது. எனக்கு நன்கு தெரியும். சில விஷயங்கள் ஏன்..?.எப்படி நடக்கின்றது…??என்று சொல்ல முடியாது.
என் அம்மா ஊட்டியில் மாரடைப்பால் இறந்து போனார். ஊட்டி கிளம்பினேன். புறப்படும் முன் சாந்தியிடம் பேசலாமா…? என யோசித்தேன். கடைசியாக ஒரு முறை பார்த்தேன்.
என்னால் வாழ்நாள் முழுவதும் சாந்தியை பார்க்க மாட்டேன் என்று எனக்கு அப்போது தெரியவில்லை.
சாந்தி….!
என் மனதினில்
ஏதடி சாந்தி….??
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.