காதல் பேசும் பிப்ரவரி: ஒரு காதலியின் டைரியிலிருந்தது

by admin 2
30 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

இன்று தான் அவனை முதன் முதலாக பார்த்தேன்.  அவனும் பார்த்தேன். உண்மையை சொல்ல வேண்டுமானால் நான் அவன் அழகில், என் மனதை பறிக்கொடுத்தேன். 

இன்று கல்லூரிக்கு அவன் வரவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. மனதில் ஏக்கம். 

இன்று அவன் இயற்பியல் ஆய்வகத்தில் டெலஸ்கோப் மூலம் என்னை பார்ப்பதை பார்த்து விட்டேன். அவனுக்கு தைரியம் இல்லை. முன்னே பின்னே பெண்களை பார்த்தவன் இல்லை. 

இன்று அவனுக்கு பிறந்த நாள். எல்லோருக்கும் சாக்லேட் கொடுத்தான. 

வகுப்பறையில் பேராசிரியர் அனுமதி வாங்கி எல்லோருக்கும் சாக்லேட்  கொடுத்தான். வரிசையாக வந்தவன் எனக்கும் கொடுத்தான். அதோடு இல்லாமல் இன்னொரு சாக்லேட் கொடுத்தான். அவனுக்கு என் மீது அலாதி பிரியம். 

நான் காதலிக்கிறேன் என்று அவனுக்கு தெரியாது. என்னிடம் சொல்ல பயம். இதுவும் எனக்கு தெரியும். இது கடைசி வருடம். அவன் என்னை பார்ப்பதை நிறுத்த வில்லை. 

என்னிடம் நோட்டு மட்டுமே கேட்டு வாங்குவான். எப்படியும் கல்லூரி  வாழ்க்கை முடியும் முன் அவன் தன் காதலை சொல்வான் என நினைத்தேன். நாட்கள் ஓடின. மாதங்கள் பறந்தன. வருடங்கள் சென்றன…. 

அவனுக்கு தைரியம் வராது என்று எனக்கு நன்கு தெரிந்தது. வேறு என்ன…? நான் தான் சொல்ல வேண்டும். உறுதி செய்தேன். நாளை கல்லூரி கடைசி நாள். இன்று மாலை அவன் வரும் போது…. 

              “எக்ஸ்க்யுஸ் மீ… ! ”  நின்றான்.   நான் ஒரு டயரியை  கொடுத்து… 

               ஐ லவ் யூ…!!! என்று சொல்லி விட்டு ஒடிவிட்டேன். எனக்கு தூக்கம் வரவில்லை. 

              நாளை…?    என்ன சொல்வான்..? ?   யாருக்கு தெரியும்.. ???

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!