எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
அவன் அவளை காதலித்தார். அவள் அவனை காதலித்தார். அவன் ஒரு மதம். அவள் ஒரு மதம். இரண்டு வருடங்களாக காதலித்து வருகிறார்கள். அவன் வீட்டில் சொல்லி அனுமதி வாங்கி விட்டான்.
அவள் வீட்டில் அனுமதி கிடைக்க வில்லை. என்ன செய்வது என்று யோசித்தாள். பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைத்தார். இருவரும் இதைப்பற்றி விவாதம் செய்தார்கள். அவன் அவள் வீட்டிற்கு போனான். ஆனால் அவள் அப்பா முடியாது என்று சொல்லி விட்டார். இருவருக்கும் குழப்பம். அவளே ஒரு வழியாக… பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்று சொன்னாள். அவனும் ஒப்புக் கொண்டான்
இருவரும் அவரவர் மதத்திலேயே இருப்பது என்று முடிவு எடுத்தார்கள். அவள் அவனுக்காக இறைச்சி உண்பதை நிறுத்தி விட்டார். அவன் சைவம். அவள் இறைச்சி வேண்டுமானால் உண்ண சொன்னார்.
பதிவு அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள மாற்று மதமாக இருந்தால் 3 மாதம் முன்பே பதிவு செய்ய வேண்டும். ஒரு வழியாக 3 மாதங்கள் ஆனது. இருவரும் தமது நண்பர்களை அழைத்து இருந்தனர். எல்லோரும் வந்து விட்டார்கள். இருவரும் மாலை மாற்றி கொண்டார்கள். திருமணம் முடிந்தது. இரு மனம் சேர்ந்தால். அதுவே திருமணம். ( திருமனம்).
ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் விருந்து. தடபுடலாக நடந்தது.
அப்பப்பா…!
மதம் மீது மதம் இல்லை..!!
வளமுடன் வாழ்க..!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.