காதல் பேசும் பிப்ரவரி: காதலர் தினம்

by admin 2
30 views

எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்

பிப்ரவரி 14. காதலர் தினம். 

ஆனால் எனக்கு ஜனவரி 1முதல் டிசம்பர் 31 வரை எல்லா நாட்களும் எனக்கு காதலர் தினம்….! 

ஆம். காதலை நேசிப்பவன். காதலை காதலித்தேன். பயன் என்ன…?  எனக்கு ஒரு காதலியும் கிடைக்க வில்லை. நான் பள்ளி, கல்லூரி, பஸ் ஸ்டாப், கோவில், ஹோட்டல், திரையரங்கம் என்று எல்லா இடங்களிலும் தேடி பார்த்தேன். ஆனால் யாரும் சிக்க வில்லை. 

மனம் வருந்தியது. மனம் வலித்தது. என் துரதிருஷ்டம் எனக்கு காதலி கிடைக வில்லை. நான் பார்க்க சுமாராகவே  இருப்பேன். கோரம் அல்ல. டிகிரி வாங்கி விட்டேன். மேலே படிக்க ஆசை இல்லை.  வேலைக்கு போக வேண்டும். 

காதல் திருமணம் செய்ய வேண்டும். இது தான் எனது இலக்கு. வேலையும் காதலியைப் போல கிடைக்க வில்லை. நான் இந்த காதலர் தினத்தில் ஒரு சபதம் செய்தேன். ஆம். அடுத்த வருடம் காதலர் தினம் முன்பே ஒரு காதலியை தேர்வு செய்து அவருடன் பழக விரும்பினேன். 

எனக்கு 2-எ இலக்கு. ஒன்று வேலை. இரண்டு காதல் செய்வது. என் இலக்கை அடைய வேண்டிய நாளும் குறித்தேன். 

ஆம்.  வேலை வேண்டும். காதலி வேண்டும். அப்படி நடந்தால் கொண்டாடுவேன். காதலர் தினம். 

                 ஆம். 

                 பிப்ரவரி 14  2026…..? 

                 இலக்கை  அடைவேனா…? 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!