எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
என் அம்மாவின் இளைய சகோதரர் சங்கரன். என் மாமா. அவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தைகள். எல்லோரும் வளர்ந்து விட்டார்கள். மாமாவின் பெண் உஷா. அவர் ஒரு வங்கியில் குமாஸ்தா. தாம்பரம் தான் வீடு. நான் என் அப்பாவுடன் வடபழனியில் இருக்கிறேன்.
போன வாரம் மாமா என்னிடம் மனம் விட்டு பேசினார். அவர் உஷாவை எனக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசை. என்னிடம் நேராகவே கேட்டார். நான் பதில் எதுவும் சொல்ல வில்லை.
எனக்கு பிரச்சினை என்று ஒன்று உள்ளது. நான் என் சக ஊழியரை காதலித்து வந்தேன். இந்த நிலையில் மாமாவிடம் இன்னும் என் முடிவை சொல்ல வில்லை. அதற்கு முன் உஷாவிடம் பேச விரும்பினேன.
அவர் ஆபிசுக்கு சென்றேன். உஷா வரவேற்றார். நான் நேரடியாக விஷயத்திற்கு வந்தேன். ” உஷா..! எனக்கு உன்னை பிடிக்கும். ஆனால் நான் ஆபிசில் ஒருவரை காதலித்து வருகிறேன். அதற்குள் மாமா என்னை உங்களுக்கு கல்யாணம் செய்து வைக்க பிரியப் படுகிறார். என்னிடம் நேரவாகவே கேட்டு விட்டார். நான் பதில் சொல்ல வில்லை.
நீங்கள் என்னை தவறாக நினைக்க கூடாது என்று தான் இதை பேசுகிறேன்…! “” கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல்… நீங்கள் வந்து உள்ளீர்கள். நானும் வங்கியில் ஒருவரை காதலித்து வருகிறேன்… அப்பாவிடம் இன்னும் சொல்ல வில்லை. அதற்குள் நீங்களே வந்து விட்டீர்கள்…! “
” அம்மா… பிரச்சினை இனி எதுவும் இல்லை. உங்கள் காதல் திருமணம் பற்றி நானே மாமாவிடம் பேசுகிறேன்… ” இப்போது பிரச்சினை எதுவும் இல்லை. மாமா உஷாவிற்கு அவர் விரும்பும் காதலனை யை கல்யாணம் செய்து வைக்க முடிவு செய்தார்
இன்று.. இரண்டு ஜோடிகளுக்கும் ஒரே நாளில் ஒரே முகூர்த்தத்தில் கல்யாணம் முடிந்தது.
உஷாவிற்கு குஷி..!
எனக்கும் குஷி…!!
காதல் வாழ்க….!!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.