எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
நான் தொலைபேசி இலாகாவில் ஆபிஸ் அசிசெஸ்டணட். டிகிரி முடித்ததுமே வேலை கிடைத்தது. எனக்கு வேலை பிடித்து இருந்தது. சுறுசுறுப்பாக வேலையை செய்வேன். இந்த நிலையில் எங்கள் ஆபிசில் புதிதாக ஆள் எடுக்கிறார்கள் என அறிந்தேன். இந்த வாய்ப்பு எஸ். எஸ். எல். சி மார்க் அடிப்படையில் தேர்வு செய்வது. நான் 80% வாங்கி இருந்ததால் முதலில் எனக்கே வேலை கிடைத்தது.
வேலை விளம்பரம் பத்திரிகையில் வந்து இருந்தது. அதன் கட் செய்து 3 காபிகள் எடுத்தேன். முதல் இரண்டு காப்பிகளை என் இரண்டு நண்பர்கள் இடம் கொடுத்தேன். 3வது காப்பியை என் கிளாஸ் மெட் உமாவிடம்… அவர் வீட்டிற்கு சென்று கொடுத்தேன். அவரும் எஸ். எஸ். எல். சி. யில் அதிக மதிப்பெண் பெற்று இருந்தார்.
ஆம். அவருக்கு வேலை கிடைத்தது. அவர் வீட்டிற்கு சென்று விளம்பரம் கொடுத்து இருந்தேன். அவர் என்னை நன்கு உபசரித்தார். அவர் எனக்கு நன்றி தெரிவித்து விட்டு 3 மாத பயிற்சிக்காக கோவை சென்றார். பயிற்சி முடிந்து நான் வேலை செய்யும் அலுவலகத்திலயே அப்பாயிண்மெண்ட் கிடைத்தது.
எங்கள் அலுவலகம் குன்னூரில் இருந்தது. நாங்கள் இருவரும் காலை ஊட்டியில் இருந்து செல்வோம். எங்கள் நட்பு சிறப்பானது. எல்லா விஷயங்கள் பற்றியும் பேசுவோம். மாலை குன்னூரில் இருந்து ஊட்டி புறப்படுவோம். இருவரும் நெருங்கி பழகினோம்.
ஆழ்ந்த நட்பு.
நட்பு
காதலாக மாறலாம்..!
மாறும்…!!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.