எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன்
மதுரையின் அருகில் 150 வருட பழமையான அரண்மனை போன்ற வீடு ஒன்றை அரசு அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்தது . அந்த வீட்டின் உரிமையாளர் அரசாங்கத்திற்கு அதை நன்கொடையாக கொடுத்து விட்டார்.
அந்த வீட்டை சுத்தப்படுத்தும் போது பல பழைமையான பொருட்கள் கிடைத்தன. அதை ஆராய்ச்சி செய்ய புதிதாக வேலைக்கு வந்த ஆராய்ச்சியாளர் கீர்த்தி ஆர்வமாக தன் வேலையைத் தொடங்கினாள்.
ஒரு பழைய இரும்பு பெட்டியை பார்த்தாள். அந்த பெட்டியில் நூற்றாண்டு பழமையான ஒரு காதல் கடிதம், அதனுடன் ஒரு சிறிய தங்க மோதிரம்.
ரஞ்சித் உருகி தன் காதலை மீனாவிற்கு எழுதிய கடிதம். இது 1920களில் எழுதப் பட்ட ஒரு அழகிய காதல் கடிதம். அந்தக் காதலின் முடிவு என்ன என்பதில் குழப்பம். அந்த கடிதம் படித்த எந்த பெண்ணும் காதல் வயப்படாமல் இருக்க மாட்டாள். கீர்த்தி அந்த காதலின் பின்னணி என்ன? அவர்கள் காதல் ஜெயித்ததா?
இத்தனை கேள்விகள் கீர்த்திக்கு..!
அரண்மனையின் அறைகளில் பல பழைய ஆவணங்கள் இருப்பதை அறிந்த கீர்த்தி, அங்கே வேலை செய்யும் ஆதர்ஷ் என்ற இளைஞனின் உதவியாளராக வைத்துக்கொண்டு சோதனை செய்ய தொடங்குகிறாள்.
ரஞ்சித் ஒரு பிரபல பொறியாளராக இருந்து இருக்கிறார். மீனா ஒரு இசைக் கலைஞர். அவர்கள் இருவரும் காதலித்தனர், ஆனால் அவர்களின் குடும்பங்கள் அவர்களை பிரித்து விட முயன்றன. கடைசி முறையாக அவர்கள் சந்திக்க ஒரு திட்டம் தீட்டினர், ஆனால் அந்த சந்திப்பு நடந்ததா என்ற கேள்வி இவர்களுக்கு மர்மமாகவே இருந்தது.
அரண்மனையின் மறைக்கப்பட்டு இருந்த ஒரு சுரங்க பாதையை கண்டுபிடித்தனர். அந்த பாதையின் முடிவில் ஒரு பழைய அறை, அங்கு மீனாவின் பழைய வீணை மற்றும் ரஞ்சித்தின் கைப் பதிவு புத்தகம் ஒன்று காணப்படுகிறது. ஆனால், அங்கு குறிப்பு ஒன்று இருந்தது. ‘எங்களை பிரித்து விட்டீர்கள். நினைவில் வைத்திருக்கும் காதலாக இன்றும் நாங்கள் வாழ்கிறோம்.’
அந்த காதல் ஜோடி அந்த அறையில் சிறிது நாட்கள் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக இருந்தது ரஞ்சித் நண்பன். அவன் அந்த வீட்டின் உரிமையாளர். அதன் பின்னர் நடந்தது என்ன என்று தெரியவில்லை.
கீர்த்தியும் ஆதர்ஷூம் அவர்கள் மறைந்து வாழ்ந்ததை ஒரு கதையாக எழுதி வெளியிட்டனர் .
இந்த ஆராய்ச்சியில் கீர்த்தியும் ஆதர்ஷும் காதலர்களாக இணைந்தனர்.
“அந்த கையேட்டில் ரஞ்சித், மீனா எப்படி வாழ வேண்டும் என்று கற்பனை செய்து எழுதி இருந்தார்களோ அப்படி நாம் வாழ வேண்டும்” என்று கீர்த்தியும் ஆதர்ஷும் பேசிக் கொண்டனர்.
அவர் கையேட்டில் எழுதி இருந்த குறியீடுகளை ஆராய்ச்சி செய்து சுவாரஸ்யமான பல விஷயங்களை ‘காதலர்கள் குறியீடு’ என அந்த புத்தகத்தில் குறிப்பிட்டனர்.
பழமையான சுரங்கம் மற்றும் அதன் பின்னணி குறித்த வரலாற்று விசேஷங்களை கண்டு பிடித்து உலகுக்கு தெரிவிக்கின்றனர்.
என்றும் அழியாத காதல் காவியம்.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.