எழுதியவர்: நா. பத்மாவதி
சிவா மற்றும் மீரா ஒரேக் கல்லூரியில் படிப்பவர்கள். சிவா எளிமையான வாழ்வைக் கொண்டவன். நல்ல மனநிலையோடு பிறருக்காக உதவுவதை அவன் வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டவன். மீராப் படிப்பிலும் திறமையிலும் சிறந்து விளங்குபவள் ஆனால் சிறிது அகந்தைக் கொண்டவளாக இருந்தாள்.
கல்லூரியில் நடந்த விவாதப் போட்டியில் இருவரும் கலந்து கொண்டார்கள். சிவாவின் அணியும் மீராவின் அணியும் எதிரெதிர் அணிகளாக இருந்தன. விவாதத்தின் போது, சிவா மிகுந்த நிதானத்துடன் பேச, மீரா எதிர்க்கட்சியாகக் கடுமையாக வாதிட்டாள். ஆனால் சிவாவின் நேர்மையான அணுகுமுறை அங்கு உள்ளவர்களையும் குறிப்பாக மீராவையும் கவர்ந்தது.
இருவரும் பழகத் தொடங்கினார்கள். சிவாவின் நேர்மை, மன அழுத்தங்களை சமாளிக்கும் விதம், ஒவ்வொரு விஷயத்தையும் மகிழ்ச்சியோடு பார்க்கும் குணம் மீராவுக்கு பிடித்துப் போனது. மீரா, சிவாவை முதலில் நட்பாக மதிக்கத் தொடங்கிப் பின் காதலாகவும் மாறியது.
ஒருநாள், மீரா தனது உணர்வுகளை சிவாவிடம் வெளிப்படுத்தினாள். ஆனால் சிவா சற்றே புன்னகையுடன், “மீரா, காதல் ஒரு புனிதமான உணர்வு. அதற்கு நாம் ஒருவரையொருவர் முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையான காதல் கண்ணியமாகவும் நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும். நாம் இருவரும் இன்னும் வளரவேண்டிய நிலையில் இருக்கிறோம். முதலில் நண்பர்களாக இருக்கலாம். வாழ்க்கையின் வழியில் எங்கு செல்கிறோமோ பின்னர் பார்க்கலாம்” என்று கூறினான்.
மீராவுக்கு சிவாவின் பொறுமையான அணுகுமுறையும், அவன் காட்டும் மரியாதையும் அவளுக்கு மேலும் ஈர்ப்பாக இருந்தது.
அன்றிலிருந்து, அவர்கள் பேசாமல், அடிக்கடி சந்திக்காமல் தங்கள் காதலை மந்தமான அணுகுமுறையில் வளர்த்துக் கொண்டனர்.
பிரச்னைகள் வந்தாலும் ஒன்றாகச் சமாளித்து, எதிர்காலத்திற்கானத் தங்களின் கனவுகளை நினைவாக்க அயராது இருவரும் படித்து உழைத்து ஓர் நல்ல அலுவலகத்தில் சேர்ந்தனர்.
கண்ணியமான காதல் என்றும் அழியாது என்பதை நிரூபிக்கும் வகையில் திருமண பந்தத்தில் இணைந்தனர் மீராவும், சிவாவும்.
காதல் வெறும் உணர்வல்ல;
அது ஒருவரை ஒருவர் மதிக்கும் கலாசாரம். இது புரியாதக் காதல் காதலே இல்லை.
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.