எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
தேர்வு செய்த படம்: படம் 3 & 5
இரண்டு படங்களிலும் நான் அவர்கள் இரண்டு பேரையும் தான் பார்த்தேன். அவர்களுக்கு இது பதினென் வயது. காம ஹார்மோன்கள் வேலை செய்யும் பருவம். இது காதல் அல்ல. இன்ஃபாக்சுயேஷன்.
ஆம். 18 வயது நிரம்பாத ஆணும் சரி பெண்ணும் சரி அவர்கள் மேஜர் ஆவதில்லை. இவர்கள் பதினென் வயதாக இருப்பினும் இவர்கள் இருவரும் காதலிக்கும் நேரம்….
ஐயோ..! சொல்ல மறந்து விட்டேனே..? இவர்கள் பக்கத்து வீட்டு காரர்கள். சிறு வயதில் இருந்தே நெருங்கி பழகி னார்கள். கார்ல் மார்க்ஸ் மற்றும் ஜென்னி போல… இவர்கள் ஒருவர் மீது ஒருவர் காதல் கொண்டனர்.
ஒரே பள்ளியில் படித்தார்கள். ஒரே இடத்தில் சாப்பிடுவார்கள். வீட்டில் இருக்கும் போது அவன் அவள் வீடு வருவதும், அவள் அவன் வீடு செல்வது வாடிக்கை.
இருவரும் வெளியே சேர்ந்தே சுத்துவார்கள். இருவருக்கும் ஹோட்டல் சென்று ஐஸ் கிரீம் சாப்பிட மிகவும் பிடிக்கும். இருவரும் நன்கு படிப்பார்கள். இரண்டு வீட்டிலும் இவர்கள் காதலுக்கு தடை விதிக்க வில்லை.
இருவரும் புத்திசாலிகள். தங்கள் உறவை பற்றி நன்கு அறிந்து இருந்தனர். இன்னும் சில வருடங்கள் தான். அந்த வயதை எட்டியதும் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்து இருந்தார்கள்.
விடலை பருவத்தில் காமம் எல்லோருக்கும் வரும். ஆனால் இவர்கள் அதை அறிந்தே இருந்தார்கள்.
அதனால் முத்தம் மட்டுமே பகிர்ந்தார்கள். உடல் உறவு வைக்க இருவரும் சேர்ந்து ஒரு முடிவு செய்து இருந்தார்கள் ஆம். திருமணம் முடிந்த பிறகு தான் உடல் உறவு என்று முடிவு எடுத்து இருந்தார்கள்.
அவனுக்கு அவள் போதும்.
அவளுக்கு அவன் போதும்.
இருவரும் சுற்றாத இடம் இல்லை. பீச், ஹோட்டல், சினிமா தியேட்டர் என அடிக்கடி வெளியே கிளம்பி விடுவார்கள்.
இவர்கள் காதலில் ஒரு விசேஷம் உள்ளது. ஆம். அவனை விட அவள் ஒரு வருடம் மூத்தவள்…. மார்க்ஸின் ஜென்னியை போல. இருவரும் இணைந்து ஒரு முடிவு செய்தார்கள். இருவரும் 18 வயதை தாண்டியதும் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
காமம் வேறு காதல் வேறு என்று நன்கு புரிந்து கொண்டவர்கள். எனவே விடலை பருவத்தில் வரும் காம இச்சை இவர்களுக்கு இல்லை.
நிதானமாக… ஆனால் உறுதியாக… காதலித்தார்கள். இவர்கள் காதல் வாழ்க…!
எப்போது இவர்களுக்கு 18 வயது வரும்…?
வருக 18…!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.