காதல் படப் போட்டி கதை: காதலை உணர்ந்த தருணம் 

by admin 2
13 views

எழுதியவர்: ஹேமா ரகு

அம்மாவை சிறுவயதிலேயே இழந்த ரவி அப்பாவின் அன்பு வளர்ப்பில் வளர்ந்தான் அப்பாவின் கஷ்டத்தை புரிந்து கொண்டு அவன் பட்டப்படிப்பு மட்டும் படித்துவிட்டு வேலைக்கு அலைந்தான்.  ஆனால் இப்போது இருக்கும் நிலையில் வெறும் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு எங்கே வேலை கிடைக்கும் அவன் சோர்ந்து தான் போனான்.  

அவனுடைய சோர்வை பார்த்த அப்பா அருண் “கவலைப்படாதே ரவி நான் உனக்கு ஒரு ஐடியா சொல்கிறேன்” என்று சொன்னார்

“என்னப்பா?” என்று ஆசையுடன் அப்பாவை பார்த்து கேட்டான்

“வேலை தேடி அலைவதற்கு பதிலாக சில கடைகளில் சென்று புத்தகங்களை வாங்கி வா. அவற்றை வைத்து நீயே ஒரு கடை தொடங்கு  புத்தகத்தை வாங்க  வருபவர்களுக்கு புத்தகத்தை பற்றியும் வாசிப்பை பற்றியும் அழகாக  விளக்கம் கொடு இதனால் உனக்கும் அறிவு வளரும் நிச்சயம் எல்லோரும் வந்து உன்னிடம் புத்தகத்தை எடுத்துக் கொண்டு சென்று படிப்பார்கள்” என்று அப்பா யோசனை சொன்னார்

“அப்பா இப்போது அலைபேசியை வைத்துக் கொண்டு அதில் எல்லா புத்தகத்தையும் எல்லோரும் படிக்கிறார்கள் நான் புத்தக கடை திறந்தால் யாராவது படிப்பார்களா?” என்று கேட்டான்

“சரி பாட புத்தகம் இல்லாவிட்டாலும் நாளிதழ்கள் வார புத்தகங்கள் மாத புத்தகங்கள் சிறுகதை புத்தகங்கள் என்று பலவற்றை வாங்கி சிறிய கடை தொடங்கு நிச்சயம் அதை படிக்க பலர் வந்து வாங்குவார்கள்”  உற்சாகமாக சொன்னார்

அப்பாவின் மனம் வருத்தப்படக் கூடாது என்று முதலில் மிகவும் சோர்வாக அரை மனதாக தான் அந்த புத்தகக் கடையை தொடங்கினான். ஆனால் அவன் வைத்திருக்கும் புத்தகக் கடையை பார்த்தவுடன் பலரும் வந்து நாளிதழ்களையும் மாத புத்தகங்களையும் வார புத்தகங்களையும் வாங்கி சென்றது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நாளடைவில் அவனுடைய புத்தகக் கடை வெகு பிரபலமாகி அவனுக்கு நல்ல லாபத்தை ஈட்டு கொடுத்தது 

ரவிக்கும் படிக்கும் பழக்கம் உண்டு என்பதால்  கடைக்கு வரும்  அனைத்து புத்தகங்களையும் படித்து விடுவான். அன்று  அவன் வழக்கம்போல் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களை சரி செய்து கொண்டிருந்தான். அந்தக் கடையில் அவ்வப்போது வந்துபோகும் வாசகர்களில், நித்யா என்ற ஒரு பெண் அவனுக்கு சிறிது வித்யாசமாக தோன்றியது.

நித்யா ஒரு லாவகமான புத்தக ரசிகை. அவள் ஒவ்வொரு வாரமும் ஒரு புத்தகம் வாங்கி செல்வாள். அவளைப் பார்த்தாலே, அவள் எந்த விதமான புத்தகங்களை விரும்புகிறாள் என்று ரவிக்கு புரிந்து விடும். 

முதலில் சிறு புன்னகை தொடங்கி இருவரும் நண்பர்களாக இருந்தார்கள் பிறகு சிறிது காலம் கழித்து ஒருவரை ஒருவர் விரும்புவதை புரிந்து கொண்டனர்.

இதனால் கடை விடுமுறை என்று விடாமல் இருந்த ரவியை வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் மதியம் அரை நாள் விடுமுறை விட்டு நித்யாவை சந்திக்க சென்றான்.

மாலைப் பொழுது மயங்கும் நேரத்தில் இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பார்கள் 

ஒருநாள், நித்யா  “காதல் என்றால் என்ன?” என்று கேட்டாள்.

அந்த கேள்வி ரவிக்கு சற்று ஆச்சர்யமாக இருந்தது. “காதல்… அது ஒரு உணர்ச்சி! இதை புத்தகங்களால் சொல்லிக்கொடுக்க முடியாது. ஆனால் சில புத்தகங்கள் உணர்த்தும்…” என்று அவன் மெதுவாகச் சொன்னான்.

நித்யா சிரித்தாள். “நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டாள்.

“நீங்கள் ஒரு புத்தகத்தில் காதலைத் தேடுகிறீர்கள். ஆனால் உண்மையான காதல் ஒருவனை உணர செய்யும், அவனுடைய எல்லா பழக்கங்களையும்  மாற்றும்.”

நித்யா சிந்திக்கத் தொடங்கினாள். “நீங்கள் சொல்வது உண்மைதான்,” என்று சொல்லி  சிரித்தவள் இவன் புத்தகத்தில் உள்ள காதலை நன்கு உணர்ந்து இருக்கிறான். இவனைப் போன்ற ஒருவன் எனக்கு கணவனாக வந்தால் அவன் புத்தகத்தை நேசிப்பது போல என்னையும் நேசிப்பான் என்று நித்யா மகிழ்ந்தாள் 

அதன்பிறகு, அவள் வாரம்தோறும் வந்து ரவியிடம் புதிய புத்தகங்கள் பற்றிப் பேசத் தொடங்கினாள். 

ஒருநாள், நித்யா கடையை விட்டு செல்லும்போது, அவள் ஒரு சிறிய கடிதத்துடன் புத்தகத்தை வைத்திருந்தாள்.

“நீ சொன்ன காதலை உணரத் தொடங்கியிருக்கிறேன்.” என்று அழகாக முத்து முத்துக்களாக எழுதி கடிதத்தில் வைத்து ரவியுடன் சிரித்துக் கொண்டே கொடுத்தாள் ரவியின் இதயம் ஒருகணம் துடித்தது. அவளுடைய கடிதத்தைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தானும் அவளைப் பார்த்து நான் உன்னை காதலிக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே சொன்னான் இவர்களின் நெருக்கமான பழக்கத்தை பார்த்த ரவியின் அப்பா நித்யாவை பற்றி விசாரிக்க அவள் மிகவும் நல்ல பெண் தான் என்று எல்லோரும் கூற அங்கு ஒரு காதல் மலர் மலர்ந்து வெற்றி என்ற பாதையில் ரவி நித்யாவை பீடு நடை போட வைத்தது.

முற்றும்!..

You may also like

Leave a Comment

error: Content is protected !!