பஞ்சபூதங்களின் ஏப்ரல்: சீற்றம்  

by admin 2
6 views

எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் 

தேர்வு செய்த தலைப்பு: நெருப்பு 

அந்த கரிசல் காட்டு  கிராமத்தின்  ஒரே  தொழிற்சாலை  அந்த   ஊரில் இருக்கின்ற    தீப்பெட்டி   ஆபீஸ்  என்று எல்லோராலும்   மரியாதையுடன் 

அழைக்கப்பட்டு   , எல்லோருக்கும்   வார சம்பளம்  என்ற பெயரால்  எதோ ஓரளவுக்கு   பசியாற்றும் அன்னபூரணி  யாக  திகழும் அந்த தொழிற் சாலை . 

மூன்று ஷிப்ட்களும்   தினமும் தொய்வின்றி  பணிகள் நடக்கும் .

ஒவொரு  சனிக்கிழமையும்  எல்லோருக்கும்  வார சம்பளம்  பட்டுவாடா செய்யப்பட்டு  விடும் .

தீடீரென ஒரு நாள்   மூல பொருட்கள்  இருந்த அறை  தீப்பற்றி  எரிவது கண்டு  எல்லோரும்  பயந்த வாறு வெளியே ஓடி வந்தனர்  .

உடன்   தீ அணைப்பு  வாகனம்    ஆலையின் அவசர அழைப்பின் பெயரில்  விரைந்து வந்தது 

அந்த கிராமத்தில்  இருந்த  குடி நீர்  தொட்டி , மற்றும் கிணறு எல்லாவற்றிலும்  இருந்து தண்ணீர்  எடுக்க பட்டு    பற்றி எறிந்த  தீ  கட்டுக்குள் கொண்டு வர பட்டது . 

நல்ல  வேளையாக உயிர் சேதம்  ஏதும் இல்லை ,  ஆனால் மீண்டும்   இயல்பு நிலை  திரும்பி மீண்டும் தொழிற் சாலை  இயங்க  குறைந்தது பத்து நாட்களாவது  ஆகும்  என்று எல்லோரும் பேசி கொண்டார்கள் 

இந்த  தொழிற் சாலையை நம்பி இருந்த  பல குடும்பங்கள் இன்னும் பத்து நாட்களுக்கு  பசி  யாற்ற  என்ன  செய்வது  என்று  மெல்ல ஒருவருக்கு ஒருவர் பேச  ஆரம்பித்தனர் . 

” ஒரு நாள் , இரண்டு நாள்  எப்படியாவது  பட்டினி கிடந்து சமாளிக்கலாம் . பத்து நாள்  என்றால்  எப்படி ? என்ற  கவலை  எல்லோருடைய  மனதிலும்  நெருப்பை  பற்றி எரிய  ஆரம்பித்து விட்டது 

நல்ல  வேளையாக  பக்கத்துக்கு ஊர்  கோவிலில்  திரு விழா நடக்கின்ற  படியால்  அன்ன  தானம்  போட்ட படியால்   சம்பளம் இன்றி  கஷ்ட பட்ட  தொழிலாளர்களின் பட்டினி என்ற நெருப்பு  ஓரளவுக்கு கட்டு படுத்த பட்டது . 

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!