இருளில் தோன்றிய ஒரு மாய உருவம்,
வெள்ளை ஆடையணிந்த தேவதை.
பயமுறுத்த வந்த பேயல்ல,
அழகிய வண்ண ஒளிகளின் துணையுடன்
சிரித்தபடி நிற்கும் புன்னகை!
வண்ண விளக்குகளால் தன்னை அலங்கரித்து,
கண்களில் அன்பையும் ஒளியையும் சுமந்து,
பயத்தைக் காட்டிலும் மகிழ்ச்சியைப் பரப்பி,
இரவின் அமைதியில் ஒளிரும் ஒரு அதிசயம்.
அதன் சின்னஞ்சிறிய புன்னகை,
மனதில் உள்ள இருளையும் நீக்கி,
இந்த உலகத்தை ஒளியால் நிரப்பி,
எல்லா இதயங்களிலும் அன்பைப் பரப்புகிறது.
இது வெறும் ஒளிரும் பேயல்ல,
ஒரு மகிழ்ச்சியின் தூதுவன்!
இ.டி.ஹேமமாலினி
சமூக ஆர்வலர்
படம் பார்த்து கவி: ஒளியின் மாய உருவம்
previous post