சித்திரைத் திருவிழா போட்டிக்கதை:எங்கே எந்தன் வெண்ணிலா

by admin
79 views

எழுத்தாளர்: உஷாராணி

அமெரிக்காவிலுள்ள டாலஸ் (Dallas) சிட்டி.

மாலை 5 மணிக்கு வெயில் சுள்ளென்று உரைக்கும் நேரத்தில் கிறிஸ்டோபரிடமிருந்து போன் வந்தது,

வெயிலினால் சோர்ந்து போயிருந்த நான் ‘ஹலோ என்றதும்,

HI… சாம்.

“”நாளை காலை brunch க்கு எங்களுடன் உணவு உண்ண வர முடியுமா “ என்று கேட்டதும்,

“” நாளை…?

சனிகிழமை தானே. கண்டிப்பாக வருகிறேன்.

அழைப்பிற்கு நன்றி என்று சொல்லி போனை வைத்தேன்.

கிறிஸடோபர், வயது 62 வயது .அவரது

காதல் மனைவி ஜேன் வயது 63..

நான் இவர்களை Dallas Airport ல சந்தித்தேன்.

லாஸ் ஏன்ஜல் போவதற்காக மூவரும் ஒரே விமானத்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்து போனதில் நண்பர்களானோம்.

மிகவும் ஆதர்ஷ தம்பதிகள்.. மூன்று வருடங்களாக பழக்கம். ஒரு நல்ல கணவன், மனைவிக்கு இலக்கணமாய் திகழ்பவர்கள்.

கிறிஸ் மெக்ஸிகன் ஜேன் . Soctland.

எதுக்கு இப்போது கூப்பிடுகிறார்கள். திருமண நாள் இப்போது தான் வந்தது.

போய் விஷ் பண்ணிட்டு பொக்கே கொடுத்து விட்டு வந்தேன்.

சரி. ரொம்ப யோசிக்க வேண்டாம்.

காலை அவர்கள் சொன்ன நேரத்துக்கு, சொன்ன ரெஸ்டாண்டிற்கு செனறேன்..

அவர்களும் அதே நேரத்துக்கு வந்தார்கள்.

அவர்களுடன் வேறெரு பெண்மணியும்

வந்திருந்தார்.

பார்த்தால் 60 வயது இருக்கும்.

பெயர் டெஸ்ஸி என்று கிறிஸ் அறிமுகப்படுத்தினார்.

அவரிடம் கை குலுக்கினேன்.

பேசிக் கொண்டே சாப்பிட்டோம்.

சாம் என்று கூப்பிட்டார்.

. என் பெயர் சம்யுக்தா. சாம் என்று தான் கூப்பிடுவார்கள்

நான் அவரை பார்த்தேன்..

டெஸ்ஸியை காண்பித்து, ‘“இவளை

திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று திடீரென்று கூறியதும அதிர்ந்தேன்.

உடனே சுதாரித்துக் கொண்டு, ஓ….. ஸாரி என்று முணுமுணுத்து விட்டு, அவளிடம் கை குலுக்கி வாழ்த்து சொன்னேன்.

ஜேனை பார்த்தேன்.

முகத்தில் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இயல்பா இருந்தார்..

அவர்கள் மூவரும் கலகலவென்று சிரித்து பேசி மகிழ்ந்தனர்.

என்னிடம் ஒரு தொய்வு ஏற்பட்டது. –

ஜேன் என்னிடம், ‘“சாம் நான் இன்னும் இரண்டு நாளில் ஸ்காட்லாந்து போறேன். Iam very excited. . எங்க family பிஸினெஸ் பார்க்க போறேன். அண்ணன் கூப்பிட்டுக் கொண்டே இருக்கான் “, என்றாள்.

கிறிஸ்ஸும், ‘“நாங்கள் கலிபோர்னியா போகப் போறோம்.

நீயும் இந்தியா போய் விடுவாய் அல்லவா. “

‘“ஆமாம். என்றதும்,

‘“அதற்காகத்தான் கூப்பிட்டோம். “

கிறிஸ்ஸூம், டெய்ஸியும் என்னையும், ஜேனையும் அணைத்து

முத்தம் கொடுத்து விடை பெற்றனர்.

ஜேன், என்னிடம் ஏன் ஒரு மாதிரியா டல்லா

இருக்க என்று வினவ,

“ உங்கள் இருவருக்கும் உள்ள புரிதல் அவ்வளவு அழகாயிருக்கும். இப்படியெல்லாம் காதலிக்க முடியுமா என்று பார்த்து வியந்து இருக்கிறேன்” என்ற என்னிடம்,.

‘“அப்புறம் எப்படி, இப்படி என்று யோசிக்கிற

அதானே.

‘“ஆமாம். என்று தலையாட்ட,

இரண்டு பேரும் ரொம்ப வருஷம் ஒண்ணா

வாழ்ந்து விட்டோம்.

இரண்டு குழந்தைகளும் பெரியவர்களாகி

அவர்கள் வழியை பார்த்து சென்று விட்டனர்.

எங்களுக்கு லைப்பை எக்ஸ்ப்ளோர் பண்ணனும்.

எனக்கும் ஒரு பிரேக் தேவை பட்டது.

லைப் ஒரே மாதிரியா போய் கொண்டுயிருந்தது.

, பேமிலி பிஸினெஸ்ஸில் புது விஷயங்கள் கற்றுக் கொள்ளலாம். So, சந்தோஷமாக இருவரும் முடிவு செய்தோம்.

பார்த்துக் கொள்வோம்.

உனக்கும் உன் லைப்பில் பிரச்சனை

என்றாய்.

பார்த்து முடிவு எடு. “

என்று கூறி அணைத்து முத்தம் கொடுத்து

விடைபெற்றாள் :

எனக்கு வீட்டிற்கு போக மனம் வராமல்,

அங்கிருக்கும் பார்க் பெஞ்சில் உட்கார்ந்துக்

கொண்டேன்..

அன்று அவ்வளவாக வெயில் இல்லை.

எப்படி இவர்களால், ஒரு பிரிவை இயல்பா எடுத்துக் கொள்ள முடிகிறது. அதுவும் இந்த வயதில். உலகிலுள்ள மனிதர்களின் மனம் எல்லோருக்கும் ஒன்று இல்லையா.

இதை எவ்வளவு நாசூக்கா, இயல்பா கையாளுகிறார்கள்.

எனக்கும் இதே பிரச்சனை. இந்த 33 வயதில்

என்னால், இவ்வளவு ஈஸியா எடுத்துக் கொள்ள முடியுமா… – ?

இவர்களின் கலாச்சாரமா … -, இல்லை பக்குவப்பட்ட மனிதர்களின் மனமா… என்று யோசித்து,

மனம் தான் காரணம் என்ற முடிவுக்கு வந்தேன்..

பின்னால யாரோ தமிழில் பேசுவது போல் கேட்டது.

நான் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு

பின்புறம் அடர்த்தியான செடிகளுக்கு பின்புற பெஞ்சில் யாரோ அமர்ந்து தமிழில் பேசிக் கொண்டுயிருந்தார்கள்.

சிறிது நேரம் அப்படியே கண்மூடி உட்கார்ந்து இருந்து விட்டு காருக்கு போனேன..

காரில் எங்கே எந்தன் வெண்ணிலா

பாட்டை போட்டேன். –

‘“எனக்கென இருந்தது ஒரு மனசு.

அதை உனக்கென கொடுப்பது சுகம் எனக்கு.

எனக்கென இருப்பது ஒரு உசுரு அதை

உனக்கென தருவது வரம் எனக்கு , “

இந்த வரிகளை பரத் பாடும் போது

அழுது விடுவேன்..

இருவருக்கும் பிடித்தமான பாடல்.

இப்பாடல் தான் எங்கள் இருவரையும் சேர்த்து வைத்தது.

பரத்தை காதலித்து தான் மணம் புரிந்து கொண்டேன்

பரத்தும், நானும் ஒரே கல்லூரி.

இரண்டு பேருமே ஒரு கல்சுரல் க்காக போன போது தான் அவனை சந்தித்தேன்…

இருவரும் 2nd year படித்துக் கொண்டியிருந்தோம் –

எங்கள் இருவரையும் பாடல் பாடச் சொன்னார்கள்.

அவர்களே பாடலை தேர்வு செய்து கொடுத்தனர்.

‘“எங்கே எந்தன் வெண்ணிலா “ என்ற பாடலை அவன் பாடினான்.

நான், ‘“ யாரோ மனதிலே

ஏனோ கனவிலே

நீயா உயிரிலே

தீயா தெரியலே “” என்ற பாட்டை பாடினேன். .

ஒரே கைத்தட்டல்கள் .

அதிலிருந்து தான் நாங்கள் முதலில் நண்பர்களானோம்.

பைனல் இயர் படிக்கும் போது, ஒரு தீஸிஸ் காக நான் கோயம்புத்தூர் நான்கு நாட்கள் போக வேண்டியது இருந்தது.

வந்ததும் கேட்டான்.

‘வீட்டுக்கு போனா என் ஞாபகம் வருமா…?.

‘“ம்ம் வரும். அப்பப்போ வரும். “

‘“உனக்கு….? என்று நான் கேட்டதும்,

அவன் என் கண்களை பார்த்து,

எப்போதும் உன் நினைப்பா இருக்கு.

நின்னா, உட்கார்ந்தா, எழுந்தா உன் நினைப்பு.. சாப்பிட பிடிக்கல, தூங்க பிடிக்கல.

உன் நினைப்பு

மனசு புல்லா ஓடிட்டு இருக்கு.

எல்லோரும் வீட்டில் இருந்தும் , நீ இல்லாத இந்த நான்கு நாட்கள் எதையோ இழந்தது போல் இருந்தது. என் இதயம் உன் பெயரையே உச்சரித்துக் கொண்டே இருந்தது.

ப்ளீஸ்… என்று என் கைகளை பிடித்துக் கொண்டான்.

எனக்கு நீ வேண்டும்.

yes. I am in Love with you.

என்று .என் கண்களை நேரா பார்த்து சொன்னான்.

எனக்கும் இதே மாதிரி இருந்தது தான் உண்மை.

நானும், “ I Love you too” என்றேன்.

நான் , மனசு குறுகுறுப்புடன் என கண்களை

தாழ்த்திக் கொண்டேன்.

அன்றிலிருந்து எங்கள் காதல் வேகமெடுத்தது. இவன் லவ் புரோபஸ் பண்ணும் போது நாங்கள் என்ஜினியரிங்

பைனல் இயர், MS படிக்க Us போனோம்.

Live in la இருந்தோம். படித்து முடித்தவுடன் வேலை தேடி திருமணமும் செய்துக் கொண்டோம்.

இதே வயது 33 ஆகிவிட்டது.

குழந்தை இல்லை.

குழந்தை என்று மனம் எண்ணியதும்,

கண்களிலிருந்து , கண்ணீர் வந்தது.

திருமணத்திற்கு பிறகும் எங்கள் காதல் உயிர்ப்புடன் இருந்தது.

நான் உடைந்து போன தருணங்களில்,

அவன் எனக்கு பக்கபலமா இருந்திருக்கிறான்.

அவன் மீதிருந்த காதல் ஒரு கடுகளவு கட

எனக்கு குறையவில்லை.

வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தா , சந்தோஷமா

போய்ட்டு இருந்தது. எனக்கு குழந்தைகள்

என்றால் கொள்ளை பிரியம். அதை எப்படியெல்லாம், வளர்க்கணும் என்று அவனிடம் ஆசையா சொல்வேன்.

அவனும் சரி நிறைய பெத்துக்கலாம் என்று சொல்வான்.

இந்தியாவிற்கு ஒரு கல்யாணத்திற்காக

சென்றோம்.

எல்லோரும் எனக்கு குழந்தை இல்லை என்பதையே சுட்டி காட்டினார்கள்.

மிகவும் அழுது வருத்தப்பட்டேன்.

பரத்,” என்னடா , படித்த பெண் நீ. இதற்கெல்லாம் ரியாக்ட் பண்ணுவியா. நம் தனிப்பட்ட விஷயத்தில் கருத்து சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. “

என்று எகிறினான்.

என் மாமியார் அடம்பிடித்து எங்களை டாக்டரிடம் அழைத்துச் சென்றார்.

பரிசோதனைகள் முடிந்து, ரிசல்ட் வர நாளாகும் என்பதால் பரத் அமெரிக்கா கிளம்பினான்.

நான் பிறகு வருகிறேன் என்று சொல்லிவிட்டேன்.

வந்த ரிசல்ட் பார்த்ததும் , அதிர்ச்சியில் உறைந்து போனேன்.

அமெரிக்கா சென்றால் எனக்கு அதை விட அதிர்ச்சி காத்திருந்தது.

பரத் வேறொரு பெண்ணுடன் இருந்தான்.

“ இவள் மது. இவளைத் திருமணம் செய்து கொள்ள போகிறேன். என்று மனசாட்சியில்லாமல் கூறினான்.

என் தலையில் ஒரு பூகம்பமே வெடித்தது.

கை, கால்கள் வெடவெடக்க ஏமாற்றத்தில் , அதிர்ச்சியில் நடுங்கிக் கொண்டியிருந்தேன்.

ஏன் என்று என் முகத்தை பார்த்து கூறாமல், சுவற்றை பார்த்து சொன்னான்.

“ உனக்கு குழந்தை பிறக்காது என்று எனக்குத் தெரியும்.

நீ போய் விடு.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தான்.

என் கையிலிருந்த அந்த ரிசல்ட் பேப்பர் கனத்தது.

ஒன்றும் பேசாமல், அவனே பேக் செய்திருந்த என் சாமான்களை எடுத்துக் கொண்டு வெளியேறினேன்.

இதோ கிறிஸ், ஜேனை பார்த்து விட்டு, நேராக அவன் இருப்பிடம் தான் போய் கொண்டுயிருக்கிறேன்.

காலிங்பெல் அடித்ததும், அவன் என்னை எதிர் பார்க்கவில்லை.

இந்த மூன்று மாத பிரிவில் இளைத்து போயிருந்தான்.

அவன் கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்தேன்..

“” ஏண்டா இப்படி பண்ண”

‘“ என்னது “

” நீ என்ன பெரிய தியாகியா. “

“” என்னை விட்டு கொடுத்து விடுவாயா. நான் வேறொருவனை கல்யாணம் பண்ணிக் கொண்டு, சந்தோஷமா வாழ்வேன் என்று நினைத்தாயா.

எதுக்கு இத்தனை டிராமா..

அவன் கன்னத்தை பிடித்துக் கொண்டே “என்னை என்ன பண்ண சொல்ற உனக்கு குழந்தை வேண்டும். என்னால் அது முடியாது.. என்று தெரிந்து போய் விட்டது.

“ நீ நாலு பேரிடம் ஏச்சு பேச்சுக்களை கேட்கக் கூடாது. எனக்கு வேற வழி தெரியல். நல்லவிதமா சொன்னா கேட்க மாட்ட அதனால்தான் இந்த டிராமா. அவள் என் நண்பனின் தங்கை… மொருஷியஸ் தமிழ் பெண்.

அந்த ஆஸ்பிட்டலில் சொதப்பி விட்டார்கள்..

“ ஆமாம். நீ இரண்டு நாளில் இந்தியா போற இல்ல. உனக்கு உங்கம்மா மாப்பிள்ளையும் பாத்துட்டாங்க. அவர்களை படாதபாடு பட்டு சம்மதிக்க வச்சேன்.

அது வேறயா… என்று அருகில் இருந்த டம்ளரை தூக்கி அவன் மேல் எறிந்தேன்.

சமாதானமாகி, நான் அழுதுக் கொண்டே,

‘“ எனக்கு அந்த நாலு பேர் சொல்ற சொல் முக்கியமா…?

இல்லை. நீ முக்கியமா…?”

சரி. இது எப்படி உனக்குத் தெரியும்.

அதை நான் சொல்கிறேன். என்று மது வந்தாள்.

சம்யுக்தா அந்த வெள்ளைக் கார நண்பர்களை பார்த்து விட்டு பெஞ்சில் உட்கார்ந்ததும், நாங்கள் இருவரும் கூட வந்த பெண்ணை காண்பித்தாள். இவள் காதில் கேட்குமாறு விஷயத்தை கூறி, நீ போட்ட டிராமைவையும் கூறிவிட்டேன்.

‘“ அடிப்பாவி. என் மூன்று மாத பிரிவை வீணாக்கி விட்டாய்.

“” அதை பார்க்க சகிக்காமல் தானே, நானும் என் அண்ணனும் பிளான் பண்ணோம்.

சரி. நீங்களாச்சு. உங்கள் லவ் ஆச்சு.

அண்ணன் உன்னிடம் கொடுத்த பையை வாங்கிட்டு வரச் சொன்னான்.

மேலும்,“ சம்யுக்தா நீ இல்லாமல் ஒரே அழுகாச்சி. பார்த்துக் கொள்.

எப்ப பாரு ஒரே பாட்டு “ எங்கே எந்தன் வெண்ணிலா…

பையை கொடுத்து விட்டு அவளை துரத்திவிட்டான்.

பரத் சீரியஸா அவளிடம்,” இதோ பாருடா. எமோஷனலா முடிவு எடுக்காத. நல்லா யோசி“ என்றதும்,

இவள் கிறிஸ், ஜேனை பற்றி கூறி அவர்கள் பிரிந்தாலும், அவர்களுடனான காதல் பிரியவில்லை. அதுவும் காதல் தான்.

எனக்கு உண்மையிலே குழந்தை பிறக்காது என்ற நிலை இருந்தால் நீ என்னை விட்டு போயிருக்க மாட்ட. ஒரு தற்காலிக பிரிவு வேண்டும் என்று தான் வெளியே போனேன்.

இந்த மது இடையில் வந்தது குழம்பித்தான போனேன்.

“ அடிப்பாவி என்றான்.

“ சரி . எனக்காக எங்கே எந்தன் வெண்ணிலா “ பாட்டை பாடு என்றேன்.

அவனும் பாட, நானும் இடையில்

“உன் காதல் எனக்கு போதும் அம்மா.

என் காதல் எனக்கு போதும் அம்மா.”

என்று பாடி அவன் மார்பில் சாயந்துக் கொண்டேன்..

முற்றும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!