புத்தகம் “குழலோன்” 2023 ல் எழுத்தாளர் சரித்ராவின் கைவண்ணத்தில் வந்த மாமருந்து
கதாபாத்திரம் : வாசு
வாசு வை எனக்கு மிகப்பிடிக்கும் ஏனேனில் அவன் மிகச்சாதரணமானவன்
யாருக்கும் கட்டுபடாமல் தனக்கும் தன் மனத்திற்கும் மட்டுமே கட்டுபட்டவன்
அவன் கடவுள் அல்ல மனிதன்
இங்கு கடவுளை விடவும் மனிதன் மனிதனாக இருப்பது தான் ஆகச்சிறந்தது
இப்புத்தகத்தில் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு பரிமாணத்தில் வாசு வந்திருந்தாலும்
வாசு அனைத்திலும் வாசுவாகவே இருந்திருக்கிறான்
அவன் தான் மனிதன்
ஆதலால் மனிதனாக வாசுவை மிகப்பிடிக்கும்
வாசு ஒரு சராசரி மனிதன் தான் ஆயினும் அவன் பேசும் பகுத்தறிவு மற்றவர் பக்தியை மதிக்கும் இவனது புத்தி
மனிதனை மனிதனாக மதிக்கும் மாண்பு இவையாயும் என் மனம் கவர்ந்தவை,
ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு ஆண் ஏதேனும் ஒரு உறவில் கூட இருத்தல் அவளை மேன்மேலும் சிறப்பிக்கும்.
நன்றி.
புத்தக உலா போட்டி: இமயா
previous post