மாவீரன் நெப்போலியன் கதையிலிருந்து…….
டூலான் துறைமுகத்தை பிரிட்டன் கையகப்படுத்திய போது உடனடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்று பரபரத்தது பிரான்ஸ் ராணுவம். வெவ்வேறு படைத் தளபதிகள் பல மாதங்களாக போராடியும் டுலானை மீட்க முடியவில்லை. இந்நிலையில் சாதாரண படை வீரரான நெப்போலியனிடத்தில் இப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. அத்தனை நாள்களாகத் தன்னுடைய மனத்தினுள் கற்பனை செய்து வைத்திருந்த ஆக்கிரமிப்புத் திட்டங்களையெல்லாம் விரிவாக விளக்கத் தொடங்கினார். தொடர்ச்சியான பீரங்கித் தாக்குதலால் நெப்போலியன் எதிர்பார்த்தது போலவே இங்கிலாந்து கப்பல்கள் பின் வாங்கின. ஒரே நாளில் சாதித்து விட்டான் நெப்போலியன். சரியான திட்டமிடுதலும் தெளிவான செயல்பட்டுகளும் இருந்தால் சாதாரண மனிதனும் சாதிக்கப் பிறந்தவனே! என்ற பாடத்தை கற்பித்தது நெப்போலியனின் வரலாறு.