பாலகுமாரன் எழுதிய கண்ணாடி கோபுரங்கள் கதையில் வரும் நாயகி புவனாவின் பாத்திரம்.
வீட்டை விட்டு வெளியில் வராத புவனா ஒரு கட்டத்தில் கணவன் செய்யாத தவறுக்காக சிறை சென்று விட ஒட்டு மொத்த தொழில் சுமையும் புவனாவின் தலையில் விழுகிறது. பாத்திரம் செய்வது தொடர்பான தொழில் அது வரையில் எதுவுமே தெரியாமல் இருந்து ஒவ்வொன்றாக தெரிந்து கொண்டு, அதற்குள் நிறைய அவமானங்களை சந்தித்து அதே சமயம் ஓரிரு உதவிகளையும் பெற்று தொழிலை நிலை நிறுத்தும் அந்த பாத்திரம் மிகவும் நன்றாக இருக்கும். முக்கியமாக கார் ஓட்ட தெரியாமல் சூழ்நிலைக்காக காரினை எடுத்துச் சென்று பிரதான சாலையில் நின்று போக பின்னால் வண்டியில் இருக்கும் ஓட்டுனர்கள் சாவு கிராக்கி என்று திட்டத் தொடங்க அழுகையுடன் அதே சமயம் உறுதியுடன் வண்டி ஓட்டும் அந்த நிகழ்வு மிகவும் நன்றாக இருக்கும். தொழிற்கூடத்தில் நடக்கும் சதிகளை முறியடித்து இடையில் தன்னுடைய பெண் பிள்ளை பருவ நிலைகளையும் நடத்தி, இறுதியில் கணவன் சிறையிலிருந்து விடுதலையாகி வருகிறான் என்று தெரிந்தவுடன் அப்பாடா, இனிமேல் கவலை என்று நினைப்பாள் புவனா. ஆனால் கணவன் சந்நியாசியாக வந்து பட்டினத்தார் பாடலை பாடிவிட்டு சென்று விடுவான். உடனடியாக பூஜை அறையில் கடவுள் படத்தின் முன் நின்று இவ்வளவுதானே சோதனை தருவாய். நிச்சயமாக சமாளிக்கிறேன் என்று சவால் விடும் அந்த கட்டம் ஒவ்வொரு பெண்ணும் பின்பற்ற வேண்டிய ஒன்று எனச் சொல்லாம். பெண்கள் முன்னேற்றத்திற்காக சுமங்கலி என்று பெண்கள் மாத இருமுறை வெளிவரக்கூடிய இதழில் எழுதிய இந்த கதை பாத்திரம் எனக்கு பிடித்த ஒன்று.
நன்றி, வணக்கம்.
புத்தக உலா போட்டி: முனைவர் எம்.ரவிச்சந்திரன்
previous post