கவிஞர்: ரேவதி பிச்சை
இந்த நவீன யுகத்தில், சிறகுகளை விரிக்கிறேன் என்று நினைத்து தன்னை தானே இழக்கிறாள் பெண்!!!
பேதையவளுக்கு தெரியவில்லை யாரின் அங்கீகாரமும் அவளுக்குத் தேவையில்லை என்று!!
யாரை கவர இல்லை யாருக்காக அவள் மெனக்கிடுகிறாள் என்பதை பொறுத்தே அல்லவா அவளின் இன்பம்!!!
அதை அவள் உணர்ந்தாளா?
உணர்ந்திருந்தால் சம்பந்தம் இல்லாத ஓட்டப்பந்தயத்தில் ஓடிக்கொண்டிருக்க மாட்டாளே!!!
அவளைத் தெளிய விடாது இது தான் சரி, இது தான் உன்னை அடையாளப்படுத்தும் என்று பல எண்ணங்களை அவளிடம் புகுத்தி, அவளைக் கையாளுகிறது ஒரு கூட்டம்….
அவள் எது செய்தாலும் அதனில் ஒரு கேள்வி கேட்டு அவளைத் திண்டாட வைக்கிறது….
அடேய் போதுமடா எதற்கு இத்தனை கேள்விகள்?
எதற்காக அவள் செயல்கள் அனைத்தும் மதிப்பிடப்படுகிறது?
சுதந்திரமாகப் பறக்க அவளுக்கு உரிமையில்லையா?
எண்ணம்போல் வாழ்க்கை அவளின் கனவு மட்டும் தானா?