எழுத்தாளர்: கௌரி பாலசுப்ரமணியம்
எத்தனையோ காலம் பழகியது போல வந்ததும் வராததுமாக எல்லாரிடமும் அன்பாகவும் இயல்பாகவும் வளைய வந்தாள் மாதவி.
கட்டிய சேலையின் சாந்தமும், தலைவாரிய நேர்த்தியும் அவள் மேல் மேலும் மரியாதையைக் கூட்டியது.
அவள் என்னவள். எனக்கே எனக்கானவள் என்று நினைத்ததை மாற்றி எல்லோருக்குமாய் உழைத்தாள்.
எத்தனையோ பெண்களைப் பார்த்தேன். ஆனால் இவள் சற்று வித்தியாசமானவள்.
கால் வலிக்கிறது என்று நாற்காலியில் சாய்ந்த என் தந்தைக்கு மஸாஜ் செய்து இப்போ வலி தேவலாமா? என்கிறாள்.
அழுது அடம் பிடித்த என் தங்கையின் மகளை ஒரு நொடியில் சமாதானப்படுத்தி உப்பு மூட்டைத் தூக்கிவிட்டாள்.
கல்லூரியில் இருந்துஅயர்ந்து வந்த என் தம்பி அதான் அவள் மச்சினரை சூடான காஃபி, பக்கோடாவில் வரவேற்றாள்.
இதெல்லாம் இன்று நேற்றல்ல காலம் உருண்டோடி ஐந்து வருடங்களைத் தாண்டியது.
இதனிடையே எங்களுக்கு இரண்டு செல்ல குட்டிகள்.
அவர்களை மனம் கோணாமல் பார்க்கும் அழகு அம்மாடியோ என விக்கித்தேன்.
அம்மாவிடம் மாதவியைப் பற்றியே பேச்சு.
அம்மாவும் அவளை தன் மக்களாகவே பார்த்தார். எப்படிம்மா என்றேன்?
அது அவள் அம்மா வளர்ப்பு. நான் வளர்ந்ததும் என் அம்மாவின் வளர்ப்பு தான் என்றாள்.
எனக்குள் நம்பிக்கைப் பூத்தது. என் மகளும் சிறப்பாய் வளர்வாள் என்று.
பெருமையாக நிற்க மாதவி கூப்பிடுகிறாள். இதோ வரேன் பா……
என்றாள் சிலாகித்து நின்றேன்………..
முற்றும்.
ஒரு பக்க கதை போட்டியில் கலந்து பரிசை வெல்லுங்கள்!
மேல் விபரங்களுக்கு: