காதலொரு இசை தான்
சிலருக்கு கேட்பதற்கு
இனிமையாக இருக்கும்
சிலருக்கு கேட்க கூட
மனமில்லாமல் இருக்கலாம்
எப்படி இருந்தாலும்
ஒரு இயற்கையை போல
தன் வேலையை செய்து கொண்டே இருக்கும்
துடிக்கும் இதயம் கூட ஒரு நாள் நின்று போகலாம்
மரமாய் வளர்ந்து இசையை மீட்டு கொண்டிருக்கும் அழியா காதலை
காற்றில் உலவி கொண்டிருக்கும்
ஆன்மாவிலிருந்தும் அழிக்க முடியாது!
-லி.நௌஷாத் கான்-
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)