காயான நீயோ கனியாக மாட்டாய்!
பூவிலிருந்து காயா? காயினுள்ளே பூவா? புரியாத புதிரும் நீ!
இறைவனுக்கு…… பூசைப்பொருளாகிறாய்,
பகைவனுக்கு……
திருஷ்டி கழிக்கும் இறைவனாகிறாய்!
மாயை,கண்வம்,ஆணவம்…
மும்மலம் அகற்றினால்,
முக்தி கிட்டும்.
உனது மட்டையை உரித்து,
நாரை நீக்கி,ஓட்டை உடைத்தால்
வெண்பொருள் கிட்டும்!
இறைத் தத்துவத்தை எளிதாக
விளக்குகின்றாய்!
இறைவனுக்கே நெருக்கமானாய்!
பூவாக,காயாக,இளநீராக,பாலாக,
எண்ணையாக……
எத்துணைஅவதாரம் நீ எடுக்கிறாய்!
அத்துணை நிலையிலுமே
உணவாக,மருந்தாக…..
உறுதுணையாக நிற்கின்றாய்.!
உன் ஏற்றம் விளங்கியதால்,
முன்னேற்றம் பெற்றிடவே,
உனையுண்டால் கொழுப்பென்று
உரைத்தனரோ!
தம் மருத்துவச் சந்தை பரப்ப,
எம் மகத்துவத்தைக் குறை
கூறும் பாவிகளுக்கோர் எச்சரிக்கை!
எங்கள் மூதாதையர் போற்றிய
முக்கண்ணனின் பெருமையைப்
போற்றுவதே எம் கடமை.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)