அடியே நீ,
பார்த்தாலே படபடக்கும்
பட்டாம்பூச்சி பறக்கும்!
செல்கள் எல்லாம் பூ பூக்கும்!
சொற்களோ தடுமாறும்…
பார்வைக்கே இத்துணை
மாற்றங்களா?!
என் அன்பே!…..
நீ தொட்டால்……ஆஹா!
இதயத்தில் மின்னலடிக்கும்,
ஏன்… துடிப்பே நின்றுவிடும்
பரவசத்தில்…….
என் பிணியும் நீ!
பிணிதீர்க்கும் மருந்தும் நீ!
கற்பனையில் இருந்த என்னை,
கனவுகளில் மீட்டெடுத்தாய்!
மரத்துப் போன இதயத்தை
மறுபடி துடிக்க வைத்தாய்!
மனதோடு என்றுமே நீதானடி,
மழைச்சாரலாய் நனைத்தாயடி!
மாயக்கரம் கொண்டு என்
காயத்தைக் கரைத்தாயடி!
நிழலாக இருந்த நீ,
இன்று……
நிஜமாக வந்து என் நெஞ்சில்
கவி பாடுகிறாயடி கண்ணே!..
“சார், மெதுவா கண்ணத் தொறந்து பாருங்க…இப்போ வலி குறஞ்சிருக்கா? இல்ல இன்னும்
கொஞ்ச நேரம் ரெய்கி கொடுக்கவா?”
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)