யாருமில்லா தனி அறையில்
இருள் அகற்றும் ஒளி விளக்கில்
எனக்கு நானே பொம்மை
எடுப்பார் கை பாவையாய்
எப்போதும் நானிருந்தேன்
எனக்கு நானே பொம்மையாய்
தனிமையில் தான் இருப்பேன்
தாய்க்கு சேய் பொம்மை
கடவுளுக்கு மனிதன் பொம்மை
உயிருக்கு உடல் பொம்மை
எனக்கு நானே பொம்மை
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)