ஓடும் இரயிலில்
ஒளிப்படம் எடுக்கும் கருவி
அந்தரத்தில் தொங்கியே
எடுத்த நிழற்படங்கள்
நிலையாய் தானிருக்கும்
இளமை மாறாமல்
இனிமை கொடுக்கும்
இரயில் பயணமாய்
வாழ்வு நகரும்
நிலைப் பொழுதில்
நிலைத்திருப்பதே
நினைவுகளாய் மாறும்
முதுமையில்
தனிமையில்
அசைபோடும் காலம்
இளமை மாறாத
நினைவுகளே
இன்பம் கொடுக்கும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
