நிழல் பட கருவி
நினைவுகளை நிரந்தர
ஒளிப்பட வடிவமாய்
தரும்பெட்டகம்
நிழல் பட கருவி…
தொடருந்து பயணம் தரும்
ஒவ்வொரு அனுபவத்தையும்
ரசனைகளையும்
ஒளிப்படத்துள் ஒளித்து வைக்கும்
மாய வித்தை கருவி…
கலைஞனின் கலை வண்ணத்தில்
கடைசி வரை நிழலுருவாய்
நீடிக்க வைக்கும்
கலைப்பட கருவி…
தலைமுறைகளை கடந்து
வாழும் வாழ்வியல்
படங்களை தரும்
ஒளிப்பட கருவி…
✍️அனுஷாடேவிட்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
